என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில்வே அதிகாரிகள்"
- 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
- இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. தூண்கள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதையை அமைக்கும் பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்ற வழக்கு போன்றவற்றால் இந்த பணியில் தடை ஏற்பட்டது. இதனால் 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
பின்னர் 2020-ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கின. இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது. 17 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த இந்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதத்தில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும். அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும் என்றனர்.
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட கால தடைக்கு பிறகு இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. இது லட்சக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி மாதத்தில் ரெயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வேதுறை தற்போது செய்து வருகிறது.
- கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் மின்சார ரெயில்களில் தவறி விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
- நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் மின்சார ரெயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் உள்பட அனைத்து முக்கியமான ரெயில் நிலையங்களிலும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள், ரெயில்களில் படிகளில் தொங்கி பயணிப்பவர்கள், தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி இதுகுறித்து ரெயில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை கோட்டத்தில், சுவரொட்டிகள், ஒலி அறிவிப்புகள், டிஜிட்டல் பிரசாரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து ரெயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எந்தச் சூழ்நிலையிலும் ரெயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழையக்கூடாது, ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது, படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், ரெயில் வரும்போது தண்டவாளங்களை கடக்க வேண்டாம், ரெயில் நிலையங்களில் நடைமேடையில் உள்ள மஞ்சள் பாதுகாப்பு கோட்டிற்குப் பின்னால் நிற்க வேண்டும் உள்பட பயணிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.
என்னதான் ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் ஆங்காங்கே ரெயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது ரெயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்தவகையில், நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் மின்சார ரெயில் மோதி உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையில் மின்சார ரெயில்களில் பயணம் செய்தபோது தவறி விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'தண்டவாளங்களில் அத்துமீறி நுழைதல் மற்றும் படிகட்டில் பயணிப்பது போன்ற ஆபத்தான செயல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ரெயில்வே ஊழியர்களை நியமித்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். ரெயில்வேயின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்' என்றார்கள்.
- ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள்.
- ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் என அனைத்து இடங்களும் ரீல்ஸ்களுக்கான இடங்களாக மாறி இருக்கிறது.
குறிப்பாக ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகள், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுத்து பதிவிடும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுப்பதால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
இது குறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
விதிகளின்படி ரெயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுப்பது அனுமதிக்கப்படுவதில்லை. புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால், சிலர் செல்போனில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் வந்தவாறு உள்ளது.
எனவே, ரெயில் நிலையங்கள், தண்டவாளம் ஆகியவற்றில் செல்போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் இதை கண்காணிப்பார்கள். அவ்வாறு ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும். இதை தீவிரமாக கடைபிடிக்க ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தண்டவாளங்களில் ரீல்ஸ் எடுப்பதை தடுக்க தண்டவாளப் பகுதிகளை அடிக்கடி ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- 2002ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
- 2003ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி, ரெயில்வே துறையில் துணை ஸ்டேசன் மாஸ்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அப்போது அகமதாபாத், வதோதரா, ஆனந்த் ஆகிய இடங்களில் வேலைப் பார்த்து வந்த 8 அதிகாரிகள் மற்றும் தனி நபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு தேர்வு பேப்பரை லீக் செய்தது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
விசாரணையைத் தொடர்ந்து சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு இன்று நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டவர்களில் தனி நபர் விசாணைக் காலத்தில் உயிரிழந்துவிட்டார். தேர்வு பேப்பர் லீக் வழங்கில் 23 வருடத்திற்குப் பிறகு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
- சுத்தம் செய்யும் பொருட்கள் வைக்கும் அறையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை
- நாகர்.ரெயில் நிலையத்தில் தீ விபத்து
நாகர்கோவில் :
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களை காலை, மாலை நேரங்களில் ஊழி யர்கள் சுத்தம் செய்வது வழக்கம். சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் ப்ளீச்சிங் பவுடர், பினாயில் திராவ கம் உள்ளிட்ட பொருட் களை முதலாவது பிளாட் பாரத்தில் உள்ள நடை மேடை யில் படிக்கட்டின் கீழ் உள்ள ஒரு அறையில் வைக்கப்படும். நேற்று அந்த அறையில் இருந்து காலை புகை மண்டலங்கள் வந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீய ணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அறையில் இருந்த பொருட்கள் முழு வதும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.முதற்கட்ட விசாரணை யில் ப்ளீச்சிங் பவுடர், பினாயில் பொருட்கள் வெப்பத்தின் தாக்கம் காரணமாக தீப்பிடித்தி ருக்கலாம் என்று தெரி கிறது. இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள். திருவனந்த புரத்திலிருந்து இந்த பிரச்சினை தொடர்பாக விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதற்கிடையில் பிளாட்பா ரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் வைப்ப தற்கான அறையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோ சித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தில் ஊழியர்க ளின் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது துறை வாரியாக நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மங்களூருவில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.
- முகமது ஷபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மங்களூருவில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயிலில் திரூரில் இருந்து பாலக்காடு வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக வல்லபுழாவை சேர்ந்த முகமது ஷபி (வயது 30) என்பவர் பிடிபட்டார். அவருக்கு ரெயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்தும் அதனை கட்டத்தவறிய அவர், வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து அவரை ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம், ரெயில்வே அதிகாரிகள் ஒப்படைத்தனர். தொடர்ந்து முகமது ஷபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து ஷோரனூர் ரெயில்வே நீதிமன்றம் உத்தரவிட்டது.
- காரின் மீது மோதிய பிறகு ரெயில் நிறுத்தப்பட்டது.
- ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கர்தஹா ரெயில் நிலையம் அருகே லெவல் கிராசிங் கேட் மூடும்போது ரெயில் பாதையில் கார் ஒன்று மாட்டிக் கொண்டது. அப்போது அவ்வழியே வந்த ரெயில் காரின் பின்புறத்தில் மோதியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
ஹஸர்துவாரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததாலும், காரில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததாலும், ஓட்டுநருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
காரின் மீது மோதிய பிறகு ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
லெவல் கிராசிங் கேட்டை வேகமாக கடக்க முற்பட்டபோது இந்த ரெயில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு காரை விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடினார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விபத்திற்கு அடுத்து, லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கிழக்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
- மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
- ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.40 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அரக்கோணத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் புளியமங்கலம், மோசூர் ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில் நிற்காமல் சென்றது. ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.
இதுகுறித்து பயணிகள் ரெயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் ரெயில் திருவள்ளூர் சென்றவுடன் ரெயில்வே அதிகாரிகள் டிரைவரை மாற்றி வேறு ஒரு டிரைவரை மூலம் ரெயில் இயக்கப்பட்டது. இது சம்பந்தமாக ரெயில்வே துறை அதிகாரிகள் டிரைவரிடம் தூக்க கலக்கத்தில் ரெயிலை இயக்கினாரா? அல்லது கவனக்குறைவால் நடந்ததா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






