என் மலர்
நீங்கள் தேடியது "St Thomas Mount Station"
- 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
- இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. தூண்கள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதையை அமைக்கும் பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்ற வழக்கு போன்றவற்றால் இந்த பணியில் தடை ஏற்பட்டது. இதனால் 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
பின்னர் 2020-ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கின. இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது. 17 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த இந்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதத்தில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும். அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும் என்றனர்.
வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட கால தடைக்கு பிறகு இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. இது லட்சக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி மாதத்தில் ரெயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வேதுறை தற்போது செய்து வருகிறது.
- ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
- திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம், 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே கடந்த 1984-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. 1995-ம் ஆண்டு இதற்கான பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 2-ம் கட்ட பணிகள் மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 1998-ம் ஆண்டு தொடங்கி, 2004-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், 2-ம் கட்ட பணி விரிவாக்கமாக கடந்த 2008-ம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.495 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு பின்பு கோர்ட்டு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரெயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது அந்த பாலம் சரிசெய்யும் பணி முடிவடைந்துள்ளது. எஞ்சிய ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணி 2008-ல் தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக இடையில் முடங்கியது.
கோர்ட்டு வழக்கு தீர்ப்புக்கு பிறகு தி.மு.க. ஆட்சி வந்ததும் 2022-ல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 500 மீட்டர் தூரம் அளவுக்கு இணைக்கப்பட வேண்டிய பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டு தூண்கள் அமைத்த போது அதன் மீது வைக்கப்பட்ட 'கார்டிடார்' பாரம் தாங்காமல் கீழே சரிந்து விழுந்தது.
பின்னர் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் பாலத்தின் மீது வைத்து சரி செய்தனர். இப்போது பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது. ஒரு சில பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது.
இந்த நிலையில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் நங்கநல்லூரில் நடைபெற்றது.
இந்த முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொது மக்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், 'வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டப்பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெறுவதால் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைப்பார் என்று கூறினார்.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி காலை திருமால்பூர் மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பயணிகள் கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதியதில் 10 பயணிகள் கீழே விழுந்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் சிவக்குமார், பிளஸ்-2 மாணவர் பரத், தனியார் நிறுவன ஊழியர் நவீன்குமார், வேல்முருகன் ஆகிய 4 பேர் பலியானார்கள்.
கல்லூரி மாணவர் விக்னேஷ், நரேஷ், விஜய், யாசர், மூர்த்தி, ஸ்ரீவர்ஷன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களின் உடல்களும், காயம் அடைந்தவர்களும் சிதறி கிடந்தனர்.
இதில் பலியானவர்களில் 2 பேருக்கு தலை துண்டானது. கால்களும் துண்டாகி கிடந்தது.
காயம் அடைந்த ஸ்ரீவர்ஷனுக்கு இரண்டு கால்கள் விஜய்க்கு வலது காலில் பாதம் துண்டானது. மற்றவர்கள் தலையில் பலத்த காயம் அடைந்தனர்.

ஸ்ரீவர்ஷனின் துண்டான கால்கள் பற்றி டாக்டர்கள் கேட்டபோது, அவை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
அங்கு பலியானவர்களின் உடலோடு தலை, கால்களை பொருத்தி பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவரின் கால்களை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டனர். உடனே ஸ்ரீவர்ஷன் அணிந்திருந்த பேண்ட்டை அடையாளமாக வைத்து அவரது கால்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஐஸ் பேக்கில் வைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இரண்டு கால்களும் மிகவும் சிதைந்து இருந்ததால் ஸ்ரீவர்ஷனுக்கு பொருத்த முடியவில்லை.
இதையடுத்து ஸ்ரீவர்ஷனுக்கு காலில் ஆபரேசன் செய்யப்பட்டது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் அடைந்தபோது ரத்தம் அதிகம் வெளியேறியதால் உயிருக்கு போராடி வருகிறார்.
பிளஸ்-2 முடித்துள்ள மாணவர் ஸ்ரீவர்ஷன் தனது நண்பர் விஜய்யுடன் கிண்டியில் உள்ள பள்ளிக்கு சென்ற போது ரெயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்தது தெரிய வந்தது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் கை கொடுப்பது மின்சார ரெயில்கள்தான்.
புறநகர் மக்களை சென்னை நகரோடு இணைக்கும் பாலமாக இருக்கும் மின்சார ரெயில்கள் சென்னை மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது என்றே சொல்லலாம்.
அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இயக்கப்படும் சென்னை மின்சார ரெயில்களை நம்பிதான் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆனால் போதுமான அளவுக்கு ரெயில் சேவைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் கொடூரம் நடக்கிறது.
நேற்று இரவு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்துக்கும் 3-வது பிளாட்பாரத்துக்கும் இடை யில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி 2 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். கூட்ட நெரிசலில் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடி பயணம் செய்த அவர்களுக்கு சிமெண்ட் தடுப்பு சுவர் எமனாக மாறியது.
சம்பவ இடத்திலேயே அவர்கள் இறந்தனர். இந்த நிலையில் இன்று காலை அதே இடத்தில், அதே சுவரில் மோதி 4 பேர் உயிர் இழக்க நேரிட்டுள்ளது. இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று அதிகாலை வழக்கம் போல மின்சார ரெயில் சேவை தொடங்கி நடந்தபடி இருந்தது. காலை 7 மணி அளவில் கோடம்பாக்கம்-மாம்பலம் இடையே உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில்கள், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வரும் மின்சார ரெயில்கள் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அனைத்து மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
மின்தடை பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உயர்மின் அழுத்த வயர்களை சீரமைத்தனர். இந்த பணி முடிவடைவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது. இதனால் கடற்கரை முதல் தாம்பரம் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்தது.
மின்சார ரெயிலை எதிர்பார்த்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் காத்து கொண்டே நின்றனர். 2 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து ரெயில்களும் தாமதமாக சேவையை தொடங்கின. நீண்ட நேரமாக காத்து நின்றதால் பயணிகள் அனைவரும் கிடைத்த ரெயில்களில் முண்டியடித்தபடி ஏறி சென்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை செல்லும் விரைவு ரெயில் கடற்கரையில் வழக்கமாக காலை 7.05 மணிக்கு புறப்படும். ஆனால் இன்று காலை மின்வயர் அறுந்து விழுந்து தடை ஏற்பட்டதால் அந்த ரெயில் 7.40 மணிக்கு தான் புறப்பட்டது.
தாமதம் மற்றும் அதிக விரைவு ரெயில் சேவை இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் ஆயிரக்கணக்கில் அந்த ரெயிலில் ஏறினார்கள். இதனால் அந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடற்கரைக்கு பிறகு கோட்டை, பார்க், எழும்பூர், சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய 9 ரெயில் நிலையங்களிலும் ஏராளமானவர்கள் அந்த விரைவு ரெயிலில் ஏறினார்கள். இதனால் நிறைய பயணிகள் ஒவ்வொரு ரெயில் பெட்டி வாசலிலும் தொங்கி கொண்டே பயணம் செய்ய நேரிட்டது.
காலை 8.25 மணிக்கு அந்த ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் வந்தது. தாமதம் காரணமாக அந்த ரெயில் சற்று வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த ரெயில் வழக்கமான பிளாட்பாரத்துக்குள் செல்லாமல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் 4-வது பிளாட்பாரத்திற்கு திருப்பி விடப்பட்டு இருந்தது. இதுதான் இன்று காலை நடந்த பரிதாப விபத்துக்கு காரணமாகி விட்டது.
4-வது பிளாட்பாரத்திற்கும், 3-வது பிளாட்பாரத்திற்கும் இடையில் இருந்த சிமெண்ட் தடுப்பு சுவரை ரெயில் பெட்டி வாசல்களில் தொங்கிக் கொண்டு வந்த பயணிகள் கவனிக்கவில்லை. ரெயில் பிளாட்பாரத்தில் நுழைந்ததும் தொங்கிக் கொண்டு இருந்த பயணிகளில் ஒருவரது முதுகில் தொங்கவிட்டு இருந்த பை சிமெண்ட் தடுப்பு சுவரில் மாட்டிக் கொண்டது.
இதனால் அந்த பயணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரோடு சேர்த்து அவர் அருகில் தொங்கிக் கொண்டு இருந்த 8 பயணிகள் அடுத்தடுத்து சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர்.
சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் 2 பயணிகளின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்றொரு பயணி தலை நசுங்கி உயிர் இழந்தார். 6 பயணிகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

பலியானவர்களில் ஒருவர் சிவக்குமார். இவர் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரில் படித்து வந்தார். இன்று காலை கல்லூரிக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.
மற்றொருவர் பரத் என்று தெரிய வந்துள்ளது. இவர் தாம்பரம் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மற்றவர்கள் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே காயம் அடைந்த 4 பேரில் 2 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பயணிக்கு 2 கால்களும் துண்டாகி விட்டதாக கூறப்படுகிறது. மற்றொருவருக்கு கை நசுங்கி உள்ளது.
அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களை ரெயில்வே போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
4 பேரை பலிகொண்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தென்சென்னை கூடுதல் கமிஷனர் சாரங்கன், ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பீஜேந்திரசிங், அடையாறு துணை கமிஷனர் சஷாங்சாய் ஆகியோர் பரங்கிமலைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விபத்து நடந்த சிமெண்ட் தடுப்பு சுவர் பகுதியையும் பார்வையிட்டனர்.
நேற்று இரவும், இன்று காலையிலும் அடுத்தடுத்த சம்பவங்களில் 6 பேர் உயிர் இழந்து இருப்பதால் இதுபற்றி ஆய்வு செய்ய ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident






