search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Tha Mo Anbarasan"

    • சென்னையில் நடை பெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    • அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    நீட் தேர்வுக்கு விலக்கு கோரியும், இதற்கு முட்டுக்கட்டையாக உள்ள மத்திய அரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டித்தும் தி.மு.க. சார்பில் 20-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    சென்னையில் நடை பெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் நடை பெறும் உண்ணாவிரதத்தில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நடைபெறும் போராட்டம் செங்கல்பட்டு அரசு மருத்து வமனை எதிரில் நடைபெறுகிறது. இந்த உண்ணா விரதத்தை மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 20-ந் தேதி தொடங்கி வைத்து கண்டன உரையாற்ற உள்ளார். இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் தலைமையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பேராசிரியர் பிரபு, மருத்துவ அணி அமைப்பாளர் செந்தில்குமார் வரவேற்புரையிலும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.

    இதில் துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, க.செல்வம் எம்.பி., மீ.அ.வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் து.மூர்த்தி, விசுவநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் படப்பை ஆ.மனோகரன், செம்பருத்தி, துர்கேஷ், மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோரும் கண்டன உரையாற்றுகின்றனர்.

    இதில் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்கின்றனர். முடிவில் சபாபதி மோகன் முடித்து வைத்து பேசுகிறார்.

    • குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும்.
    • மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்க்க வாரம் ஒரு நாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 217 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டு மனைப் பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும்.

    குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும், மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களும், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 4 பள்ளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பரிசளிப்பு தொகைக்கான காசோலையும், கூட்டுறவுத் துறை சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பீட்டில் கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.07 கோடியில் வங்கி கடன் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.

    சென்னை:

    நந்திவரம் கூடுவாஞ்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சார்பில் 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், தி.மு.க.தலைமை பொதுக் குழு உறுப்பினர் இரா.ஜிஜேந்திரன் ஜிஜி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) எஸ்.கே.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் தாமோதரன், வண்டலூர் வட்டாட்சி யர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் கே.பி.ஜார்ஜ், கே.பி. அச்சுததாஸ், எஸ்.அப்துல்காதர், டி.ராமமூர்த்தி, ஜெ.மனோகரன், கே.பாஸ்கர், மதன கோபால், எம்.கே.டி.சரவணன், எம்.கே.எஸ்.செந்தில், ஓய்.ஜினோ, எஸ்.மதன், கே.பி.நரேஷ்பாபு, ஜி.எம்.கார்த்திக், எஸ்.முரளி, எஸ்.ஜெகதீசன், டி.பிரகாஷ், எஸ்.பழனி வேல், ஆர்.கணேசன், த.சீனிவாசன், என்.கோகுலநாதன், வி.சண்முகம், ஜெமினிஜெகன்,எம்.கே.பி.சதீஷ்குமார், ஆர்.தினேஷ்குமார்,பொன்.தசரதன், புண்ணியகோட்டி, ஏ.எஸ்.தரணி, பாலாஜி, வெங்கடேசன், ஜெ.காளிஸ்வரன்,எஸ்.ராம்பிரசாத், பி.கணேசன், சந்திரசேகர் மற்றும் கவுன்சிலர்கள் ஸ்ரீமதி ராஜி, ப.ரவி, ஜெ.குமரவேல், டி.சதீஷ்குமார், ஆர்.விக்னேஷ், எம்.நாகேஸ் வரன், அ.டில்லீஸ்வரி ஹரி, ஜெயந்திஅப்பு, எம்.நக்கீரன், எஸ்.சரஸ்வதி, திவ்யா சந்தோஷ்குமார், சசிகலாசெந்தில், அம்பிகா பழனி, ஸ்ரீமதி டில்லி, கெளசல்யாபிரகாஷ், ஜெயந்தி ஜெகன், நளினி மோகன், பரிமளா கணேசன், சுபாஷினி கோகுலநாதன்,கே.கார்த்திக் மற்றும் வழக்கறிஞர்கள் வி.மகாலிங்கம், ஜெயசாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
    • பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் மறைமலைநகர் பேரமனூர் பகுதியில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம், எம். எல். ஏ.க்கள் சுந்தர், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி,

    பாபு மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிகள் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.
    • விழாவில் பள்ளியின் மூத்த முதல்வர் சைலஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

    சென்னை:

    நங்கநல்லூரில் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி- ஸ்ரீ வாரி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின் அறிவியல் கலை கைவினை கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சியை குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    பிரின்ஸ் பள்ளி மிகவும் கட்டுப்பாடுடன், கண்டிப்புடன் நடைபெறும் பள்ளியாகும். இங்கு படித்த ஏராளமான மாணவர்கள் பல்வேறு உயர் பதவியில் உள்ளனர்.

    மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் போன்ற பாடத் திட்டத்திற்கு தகுந்தார்போல் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது.

    கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவது போல், பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு புத்தொழில் பயிற்சி வழங்க இருக்கிறோம். அரசு இதற்கான திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மண்டல குழு தலைவர் சந்திரன் பகுதி செயலாளர் குணா, கவுன்சிலர் தேவி, பள்ளியின் சேர்மன் டாக்டர் கே.வாசு தேவன், துணைத் தலைவர்கள் விஷ்ணு கார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், பள்ளியின் மூத்த முதல்வர் சைலஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    காஞ்சிபுரம்:

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் போது கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அடையாறு ஆற்றுப்பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கரைகளின் உயரமும் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் அடையாறு ஆற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் விரைந்து முடிக்க பொதுபணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    பின்னர் வரதராஜபுரம் மற்றும் சோமங்கலம் பகுதிகளில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து ரூ.70 கோடி மதிப்பில் 1800 மீட்டர் வரை அமைக்கப்பட உள்ள கீழ் மட்ட கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்து விரைவில் முடித்திட அறிவுறுத்தினார்.

    இதேபோல் மகாலட்சுமி நகர், வரதராஜபுரம் மற்றும் முல்லை நகர், ராயப்பா நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அகலப்படுத்தும் பணி மற்றும் போரூர் ஏரியின் உபரி நீர் வெளியேற கட்டப்படும் கீழ் மட்ட கால்வாய் பணி, போரூர் ஏரியில் புதிய மதகு அமைக்கும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    குன்றத்தூர் பகுதிகளில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதிகளில் பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனை முதல் அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டு, மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்த திட்டத்திற்கான பணிகள் ஒரு வருட காலத்திற்குள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 20 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

    இனிவரும் காலங்களில் பெரும் மழை வந்தாலும், பொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காத அளவிற்கு முதல்-அமைச்சர் மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டி இந்த திட்டத்திற்கான பணிகள் செய்து முடித்து தந்திருக்கிறார்.

    ஒரத்தூர் தடுப்பணை பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், நீர்வளத் துறை உதவி பொறியாளர் குஜராஜ் உடன் இருந்தனர்.

    ×