ரெயிலில் ஓசி பயணம் செய்தவருக்கு 15 நாட்கள் சிறை

மங்களூருவில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.முகமது ஷபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மங்களூருவில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயிலில் திரூரில் இருந்து பாலக்காடு வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக வல்லபுழாவை சேர்ந்த முகமது ஷபி (வயது 30) என்பவர் பிடிபட்டார். அவருக்கு ரெயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்தும் அதனை கட்டத்தவறிய அவர், வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து அவரை ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம், ரெயில்வே அதிகாரிகள் ஒப்படைத்தனர். தொடர்ந்து முகமது ஷபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து ஷோரனூர் ரெயில்வே நீதிமன்றம் உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com