search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசைஞானி இளையராஜா"

    • மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர்.
    • ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் ('அயோர்டா') அவருக்கு வீக்கம் இருந்தது.

    அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர், மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர்.

    சிகிச்சையை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.

    இந்நிலையில், "ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை வீடு திரும்ப இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்" என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும்.

    வருக, வருக...

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது.
    • தெருக்கூத்து கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    'தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    லேர்ன் அண்ட்டீச் புரொடக்சன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது.

    இந்த கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்து கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி.
    • பிரேம்ஜியின் திருமணத்தில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவில்லை.

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் பிரேம்ஜி, ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

    தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர்.

    நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

     

    இந்நிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருத்தணியில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு மத்தியில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

    பிரேம்ஜியின் திருமணத்தில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவில்லை. இதனால் கங்கை அமரன் குடும்பத்துக்கும், இளையராஜாவுக்கும் ஏதோ பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டது.

    இந்நிலையில் பிரேம்ஜி தனது மனைவியுடன் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரேம்ஜி தனது மனைவியுடன் இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×