என் மலர்
நீங்கள் தேடியது "இளையராஜா பாடல்"
- குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- மைத்திரி மூவி மேக்கர்ஸ் நீதிமன்றத்திற்கு எச்சரிக்கை விடுத்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இசைஞானி இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நீறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் விடுத்துள்ளார்.
திருச்சூர்:
கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பாகன் யானை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த யானை கடந்த சில நாள்களாக தூங்குவதற்கு சிரமப்பட்டுவந்து இருக்கிறது.
யானையின் தூக்க மின்மையை போக்க யானைக்கு தாலாட்டாக ஒரு சினிமா பாடலை பாடியுள்ளார். அந்த பாடலில் மயங்கி யானை தூங்கி இருக்கிறது. இப்போது தினமும் அந்த பாடலை பாடியே தூங்க வைக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
பாகன் பாடும் மலையாள பாடலுக்கு இசையமைத்தவர் நம் இசைஞானி இளையராஜா. 1984ம் ஆண்டு வெளியான ‘மங்களம் நேருன்னு’ என்ற மலையாளப் படத்தில் உள்ள ‘அல்லியிளம் பூவே’ என்ற பாடலைத்தான் பாகன் பாடுகிறார்.
இந்தப் படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார், கிருஷ்ண சந்திரன் என்பர் இந்தப் பாடலை பாடியுள்ளார். ‘இளையராஜா இசை என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை எனப் பலர் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது அது யானைக்கும் பிடித்துள்ளது. அவரது இசை என்றும் மறையாது’ என சமூகவலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர். #Ilaiyaraaja






