என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூங்காமல் யானை"

    தூங்காமல் முரண்டு பிடித்த யானைக்கு இளையராஜாவின் பாட்டைப் பாடித் தூங்க வைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த பாகன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. #Ilaiyaraaja

    திருச்சூர்:

    கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பாகன் யானை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த யானை கடந்த சில நாள்களாக தூங்குவதற்கு சிரமப்பட்டுவந்து இருக்கிறது.

    யானையின் தூக்க மின்மையை போக்க யானைக்கு தாலாட்டாக ஒரு சினிமா பாடலை பாடியுள்ளார். அந்த பாடலில் மயங்கி யானை தூங்கி இருக்கிறது. இப்போது தினமும் அந்த பாடலை பாடியே தூங்க வைக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

    பாகன் பாடும் மலையாள பாடலுக்கு இசையமைத்தவர் நம் இசைஞானி இளையராஜா. 1984ம் ஆண்டு வெளியான ‘மங்களம் நேருன்னு’ என்ற மலையாளப் படத்தில் உள்ள ‘அல்லியிளம் பூவே’ என்ற பாடலைத்தான் பாகன் பாடுகிறார்.

    இந்தப் படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார், கிருஷ்ண சந்திரன் என்பர் இந்தப் பாடலை பாடியுள்ளார். ‘இளையராஜா இசை என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை எனப் பலர் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது அது யானைக்கும் பிடித்துள்ளது. அவரது இசை என்றும் மறையாது’ என சமூகவலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர். #Ilaiyaraaja

    ×