search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படிக்கட்டு பயணம்"

    • கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
    • பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.

    மதுரை:

    தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளையும் ஐகோர்ட்டு பிறப்பித்தது.

    கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கினாலும், மாணவர்கள், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும் விபத்தும் குறையவில்லை. அவர்களை பஸ் டிரைவர், கண்டக்டர் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில் டிரைவர், கண்டக்டர்களை தாக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.

    எனவே இளைஞர்கள், மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பஸ்களிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்துவது அவசியம் என அறிவுறுத்தினர்.

    பின்னர், தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் :

    படியில் பயணம் நொடியில் மரணம்என்ற வாசகத்தை, பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கவனித்திருக்க முடியும். ஆனால் இந்த வாசகம் வெறும் எழுத்தளவில் மட்டுமே உள்ளது.பெரும்பாலான பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதை நாம் அன்றாடம் பார்க்க முடிகிறது.

    தங்களை ஹீரோவாக கற்பனை செய்து கொள்ளும் இன்றைய இளம் தலைமுறையினர் சிலர், இதுபோன்ற சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்.அவ்வாறு திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டை அருகே கோவை செல்லும் தனியார் பஸ் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பஸ் முழுவதும் பயணிகள் நிறைந்திருக்க ஏறும் வழி, இறங்கும் வழி என இரண்டு பக்கமும் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்களில் சிலர் ஒற்றைக்காலை ஆட்டியபடி தங்களது ஹீரோயிசத்தை காண்பித்தபடி சென்றனர்.பின்னால் காரில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இது போன்ற செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×