என் மலர்
இந்தியா

டெல்லியில் தடையை மீறி இயக்கப்பட்ட 80 பழைய வாகனங்கள் பறிமுதல்
- டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
- பழைய CNG வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் ஜூலை 1 முதல் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் RC-ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறி இயக்கப்படும் 2 சக்கர வாகங்களுக்கு 5000 ரூபாயும் 4 சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும் அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தற்போது, 15 ஆண்டுகளுக்கும் மேலான CNG வாகனங்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 80 பழைய வாகனங்களைப் பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக பெட்ரோல் பங்குகள் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளன.






