search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Mali"

  • 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
  • மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது.

  உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' யானை உயிரிழந்தது. அந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. பிரேத பரிசோதனையில் யானைக்கு கணைய புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. மாலி யானை தனது வாழ்நாளில் பெரும்பகுதியை தனியாகவே கழித்தது.

  மாலி யானை பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் இமெல்டா மார்கோஸுக்கு 1981-ம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால்பரிசாக வழங்கப்பட்டது. மிருகக்காட்சிசாலையில் 1990-ம் ஆண்டு ஷிவா என்ற யானை உயிரிழந்ததிலிருந்து மாலி யானை மட்டுமே இருந்தது. மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது. அவள் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததால் அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

  மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் எம்எஸ்ஏ கிளர்ச்சி இயக்கத்தினர் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். #MaliAttack
  பமாகோ:

  மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மாலி-நைஜர் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த பயங்கரவாதிகள், பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், எம்எஸ்ஏ கிளர்ச்சி இயக்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இந்த பயங்கரவாத தாக்குதல் மினாகாவிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் நடந்தது. இப்பகுதியில் கடந்த  2018 ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதிகளின் வன்முறைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலான மக்கள் புலானி இனத்தவர்கள் ஆவர்.

  தற்போது நடந்த தாக்குதலுக்கு எம்எஸ்ஏ இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கிடையிலான மோதலின் முடிவில் முதியவர்கள் உள்ளிட்ட 20 பேரை பயங்கரவாதிகள் கொலை செய்ததாகவும் அந்த இயக்கம் கூறியுள்ளது.

  கடந்த ஆகஸ்டு மாதம், இது குறித்து வல்லுனர்கள் குழு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அளித்துள்ள அறிக்கையில், “பயங்கரவாத குழுக்களுக்கும், சர்வதேச மற்றும் மாலி  அரசுப் படைகள் ஆகியவற்றிற்கும் இடையேயான மோதல்களால் பொது மக்களிடையே  பதற்றம் அதிகரித்துள்ளது”, என கூறப்பட்டது.

  2012-ல் முக்கியமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதிகளின் எழுச்சியை தடுப்பதற்கு மாலி படைகளுக்கு பிரான்ஸ் உதவி செய்தது. அதன்பின்னர் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட 2015 ம் ஆண்டின் சமாதான உடன்படிக்கை இருந்தபோதிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.

  அப்போதிலிருந்து, மாலியின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள், அண்டை நாடான பர்கினா பாசோ மற்றும் நைஜர் எல்லைகளில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. #MaliAttack
  மாலியில் வேட்டைக்காரர்கள் நிகழ்த்திய துப்பாக்கி தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Mali #Hunter #Farmer #Conflict
  பமாகோ:

  மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் கோலோகன் என்கிற கிராமம் உள்ளது. இங்கு புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கால்நடை மேய்ப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கும், ஆயுதம் ஏந்திய வேட்டைக்காரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் கோலோகன் கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த வேட்டைக்காரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளினர். மேலும் அங்கிருந்த வீடுகளுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடினர்.

  இந்த தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். #Mali #Hunter #Farmer #Conflict 
  மாலி நாட்டில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 7 ராணுவ வீரர்களுடன் பொதுமக்களில் ஒருவரும் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MaliBombBlast
  பமாகோ:

  உலக நாடுகள் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான வழிமுறையை மேற்கொள்ளும் நிலையில், பயங்கரவாதிகள் தங்களது தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்களினால் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பலர் தங்கள் வாழ்வை இழக்கின்றனர்.

  இந்நிலையில், இன்று மாலி நாட்டில் ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் வெடிகுண்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

  இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எவ்வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் யாரேனும் காயமுற்றார்களா? பலி எண்ணிக்கை உயருமா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. #MaliBombBlast
  மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். #MilitantsAttack
  பமாகோ:

  மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா கிராமத்தில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு படைகள் மற்றும் ஐ.நா. அமைதி காப்பு இயக்கம் ஆகியவற்றின் மீது பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கிராமத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் அப்பகுதியில் எதிர்ப்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர்.

  இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், அங்கிருந்த ஒரு லாரி மற்றும் மூன்று வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
  மாலி நாட்டில் ஆப்ரிக்க ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். #Mali #Africanmilitarybase

  பமாகோ:

  ஆப்பிரிக்க நாடான மாலியில் தியூரக் பயங்ரவாதிகளை ஒடுக்க கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ளது. அதோடு மற்ற சில ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ராணுவத்தினரும் பயங்கரவாதிகள் ஒடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

  மத்திய மாலி பகுதியில் உள்ள செவாரி நகரில் ஆப்ரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள முகாம்கள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

  மேலும் வெடிகுண்டு நிரப்பிய கார்களை முகாம்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களால் ராணுவ முகாமில் இருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

  இந்த தாக்குதலில் ஆறு பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Mali #Africanmilitarybase
  மாலி நாட்டில் உள்ள புலானி மற்றும் டோகன் ஆகிய இருபெரும் சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 32 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். #MaliUnrest
  பமாகோ:

  மாலி நாட்டில் உள்ள புலானி மற்றும் டோகன் ஆகிய இரண்டு பழம்பெரும் சமூகத்தினருக்கு இடையே நிலம் சார்த்த மோதல் பல காலமாக இருந்து வருகிறது. மாலி நாட்டின் மத்திய பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் உலவுவதாகவும், அவர்களுடன் புலானி இன மக்கள் தொடர்பு வைத்திருப்பதாகவும் டோகன் சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

  இந்நிலையில், புலானி மக்கள் வசிக்கும் மோப்தி பகுதியில் உள்ள கவுமகா கிராமத்தை சுற்றிவளைத்த டோகன் இன பாரம்பரிய வேட்டையர்கள், புலானி மக்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போனதாகவும், இதுவரை 16 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  இதுதொடர்பாக கலவரம் நீடிக்காமல் இருப்பதற்காக அதிக அளவிலான பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மாலி நாட்டில் நீடித்து வரும் இந்த இரு சமூகத்தாருக்கு இடையேயான மோதலை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. #MaliUnrest
  ×