சாலையில் தவறி விழுந்த மதுபாட்டில்கள்... அள்ளிச்சென்ற பொதுமக்கள்... வீடியோ வைரல்

மதுபான கடைக்கு மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டது. பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.
agra liquor
Published on

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மதுபானங்கள் கொண்டு சென்ற வாகனம் வேகத்தடையில் ஏறிய போது மதுபானங்கள் அடங்கிய பெட்டிகள் கீழே விழுந்தது.

அப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பலரும் மதுபானங்களை அள்ளிக்கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மதுபான கடைக்கு மதுபானங்கள் அடங்கிய 110 பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. அப்போதுதான் 30 பெட்டிகள் கீழே விழுந்துள்ளது.

மதுபானங்கள் கீழே விழுந்ததை கண்டுபிடித்த ஓட்டுநர் வாகனத்தை திருப்பி வருவதற்குள் பாதுபாட்டில்களை தூக்கி சென்ற அனைவரும் ஓடிவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com