நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க புதுவையில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்த வாலிபர் கைது

நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க புதுவையில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க  புதுவையில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்த வாலிபர் கைது
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 34). இவர் புதியதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய உள்ளார். இதையடுத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பார்ட்டி வைக்க முடிவு செய்து, புதுவைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கினார். அதனை ஒரு கட்டைப்பையில் போட்டுக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினார். இவர் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இறங்கி, கிராமத்திற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். போலீசாரை கண்டவுடன் கோவிந்தசாமி பதட்டமாக அங்கிருந்து வேகமாக நடந்தார். இதனைக் கண்ட போலீசார் அவரை மடக்கிப் பிடித்து பையை சோதனையிட்டனர். அதில் இருந்து புதுவை மதுபானங்களை கைப்பற்றி வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அதேபோல உளுந்தூ ர்பேட்டை கார்நேசன் வீதியைச் சேர்ந்த சாந்தா (60), மணலூர் சத்தியராஜ் (29) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உளுந்தூர்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம், மதுபானம், கஞ்சா விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com