என் மலர்
இந்தியா

பீகாரில் ஊடுருவல்காரர்கள் உதவியோடு எதிர்க்கட்சிகள் வெற்றிபெற விரும்புகின்றன: நட்டா குற்றச்சாட்டு
- SIR-க்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன.
- ஏனென்றால், அவர்கள் ஊடுருவல்காரர்கள் வாக்குகள் அடிப்படையில் அரசு அமைக்க விரும்பினார்கள்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பீகார் மாநில வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பீகார் நடத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன. ஏனென்றால், அவர்கள் ஊடுருவல்காரர்கள் வாக்குகள் அடிப்படையில் அரசு அமைக்க விரும்பினார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அது நடக்க அனுமதிக்காது. அவர்களின் நிலை முற்றிலும் வெளிப்பட்டுள்ளது. அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு, அவர்களிடம் ஆதாரம் இல்லை.
பணம் பறித்தல், காட்டு ராஜ்ஜியம், மிரட்டல்தான் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிலைப்பாடு. கடந்த 20 ஆண்டுகளில் நிதிஷ் குமார் காட்டு ராஜ்ஜியம் இல்லாத பீகாரை உருவாக்கியுள்ளார்.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
Next Story






