search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Members"

    • தற்போது இந்த இயக்கத்த்தில் 2 கோடி உறுப்பினர்களை எட்டி உள்ளோம்.
    • தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத்தர தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், ராம்குமார், சேகர், ரெத்தினசாமி, இளமதி சுப்பிரமணியன், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் அனைவரை யும் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகரங்களில் அ.தி.மு.க. மகளிரணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யும் பணியை வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதிக்குள் முடித்து படிவஙக்ளை ஒப்படைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசி நமக்கு உள்ளதால் தான் தற்போது இந்த இயக்கத்த்தில் 2 கோடி உறுப்பினர்களை எட்டி உள்ளோம்.

    நாடாளுமன்ற தேர்த லோடு, சட்ட மன்ற தேர்தலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. சம்பா சாகுபடி செய்ய முடியுமா? என விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுத்தர தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் எப்போது வந்தாலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தான் அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், முன்னாள் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், மதியழகன், கோவி.இளங்கோ, கோவி.தனபால், முருகானந்தம், இளங்கோவன், பாரதிமோகன், அசோக்குமார், சாமிவேல், கலியமூர்த்தி, இளம்பெண்கள், இளைஞர் பாசறை செயலாளர் துரை.சண்முகபிரபு மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 51-வது வட்ட செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.

    • திருப்புவனம் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காத உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
    • கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    மானாமதுரை

    திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியம்மாள், சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், விரிவாக்க அலுவலர் அமுதா மற்றும் சங்கத்தின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. திருப்புவனம் ஒன்றியம் கீழராங்கியத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்த உறுப்பினர்கள் மற்றும் சங்கத்துக்கு நீண்டகாலமாக பால் வழங்காத உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் இயக்குநர் முருகேசன் நன்றி கூறினார்.

    • நெற்குப்பை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மன்ற அலுவலகத்தில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். செயல் அலுவலர் உமா மகேஸ்வ ரன் முன்னிலை வகித்தார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் மாதாந்திர வரவு-செலவு கணக்குகளை மன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பித்தார்.

    அதனைத் தொடர்ந்து தமிழக அரசு மன்ற உறுப்பி னர்களுக்கு உயர்த்தியுள்ள அகவிலைப்படிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் நகர்ப்புற திட்டத் தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைத்தல், நகரில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பிரதான குடிநீர் ஊரணிகளான நல்லூரணி மற்றும் செட்டி ஊரணி ஆகியவற்றை சீரமைத்தல், மாநில நகர்புறத் திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்சார சிக்கனத்தை ஏற்படுத்தும் விதமாக புதிய எல்.இ.டி. விளக்குகளை ஏற்படுத்துதல், பள்ளத்து பட்டியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பணி தொடங்குதல் போன்ற 28 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கல்குறிச்சி ஊராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத் துக்கு உட்பட்ட கல்குறிச்சி ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவி யாஸ்மின் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவி பானுவனிதா உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பெரும் பாலான உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவி யாஸ்மின் உறுப்பி னர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை என்றும், குடிநீர் பிரச்சனையை சரிசெய்யவில்லை என்றும், கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும் ஊராட்சி மன்றகூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் மீது கையெழுத்து போடமல் அவர்கள் வெளியேறினர்.

    பின்னர் துணைத்தலைவி பானுவனிதா கூறியதாவது:-

    தலைவி யாஸ்மின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றும் வரை தொடர்ந்து கூட்ட த்தைப் புறக்கணிப்போம். இவரது நிதி முறைகேடு குறித்தும், அவரை பதவியிலிருந்து நீக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.ஏற்கெனவே நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களின் படி, எந்த ஒரு திட்டப் பணியும் நடைபெறவில்லை. அடிப்படை வசதி செய்யாததால் வார்டு மக்களிடம் எங்களால் பதில் கூற இயலவில்லை என்றார்.

    துணைத்தலைவி பானு வனிதா, உறுப்பினர்கள் சத்தி, வாணி முத்து, மலைச்சாமி, மகாலட்சுமி, பூமா, பாண்டியம்மாள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    • தமிழ்நாடு நாடக நடிகர் சங்க பேரவை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு நாடக, நடிகர் சங்கத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூடி தேர்தல் முறையில் புதிய தலைவர் செயலாளர் பொருளாளரை தேர்வு செய்தனர். புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளிடம் முன்னாள் நிர்வாகிகள் சங்க கணக்கு வழக்குகளை ஒப்படைப்பது வழக்கம். இந்த நிலையில் முன்னாள் சங்க நிர்வாகிகள் சங்க கட்டிடம் கட்டியது, வசூல் பெற்றது ஆகியவற்றில் முறைகேடு செய்ததை தொடர்ந்து அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். அதை பதிவாளரிடம் சமர்ப்பித்தனர். தீர்மானங்கள் செல்லாது எனவும், பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பதிவாளர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து தமிழ்நாடு நாடக, நடிகர் சங்க பேரவை கூட்டம் மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் தலைவர் கலைமணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 18 திட்ட உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் ஏற்கனவே 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 8 திட்ட உறுப்பின ருக்கான தேர்தல் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    18 திட்ட உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் ஏற்கனவே 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 8 திட்ட உறுப்பின ருக்கான தேர்தல் நடைபெற்றது.

    சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 697 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் மாநகராட்சி மேயர், மண்டல தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சி லர்கள் வாக்களித்தார்கள்.

    இத்தேர்தலில் சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 24 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தல் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிக்கு சேலம் மாநகர உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. தி.மு.க, அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திட்டக்குழு உறுப்பினர்களுக்கு போட்டி யிட்டு உள்ளனர். திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள் குவிந்துள்ளனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கு இடையே தேர்தல் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் தி.மு.க உறுப்பினராக சேர்ந்தனர்.
    • ன்னாள் மண்டல தலைவரும் வார்டு கவுன்சிலருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான க. செல்வராஜ் உத்தரவின் பேரில் திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டில் முன்னாள் மண்டல தலைவரும் வார்டு கவுன்சிலருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் தி.மு.க உறுப்பினராக சேர்ந்தனர்.

    இந்த முகாமில் வட்ட செயலாளர் ராஜ்குமார், வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திராவிட பாலு, வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் அன்பு, அண்ணா காலனி பகுதி பிரதிநிதி குப்புசாமி, நிர்வாகிகள் ஆறுமுகம், ராஜவீதி மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து விடுபடாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
    • கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வகித்து இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து விடுபடாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

    கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் பிரதிநிதி செல்வகுமார், இல்லம் தேடி கல்வி பொறுப்பாளர் கார்த்திகா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ரமா, வளர்மதி, சித்ரா, அனுராதா, செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க புதிய உறுப்பினர் சேர்க்கைக்காண படிவங்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், ஒன்றிய கழக செயலாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். புதிய உறுப் பினர்கள் படிவங்களை அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். ராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலா ளர்கள் வெற்றி செழியன், கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியண்ணன், பகுதி செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், வக்கீல் ஜீவானந்தம், அவனியாபுரம் முருகேசன், சரவணன், பன்னீர்செல்வம், மாவட்ட கலை பிரிவு செயலாளர் அரசு, மேலூர் சரவணகுமார் ,மற்றும் மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத் தலைவர் கவுரி சங்கர், சேனாபதி, ஒத்தக்கடை ராஜேந்திரன், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

    இந்த இயக்கத்தின் ஆணி வேர்கள் தொண்டர்கள் தான். அம்மா இருந்தபோது ஒன்றரை கோடி தொண் டர்கள் இருந்த இந்த இயக்கத்தை, 2 கோடி தொண்டர்களாக உருவாக்கிட எடப்பாடியார் திட்டங்களை வகுத்து வருகிறார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங் குன்றம், மேலூர், மதுரை கிழக்கு ஆகிய 3 தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைவரும் இந்த இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஒவ் வொரு தொகுதிகளிலும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நிர்ணயித்து, 3 தொகுதிகளிலும் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உருவாக்க சிறப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பள்ளி ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தினை தமிழ்நாடு அரசு விரைந்து நிறை வேற்றிட வலியுறுத்தி, ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆசிரியர்கள் தாக்கப்படு வதும், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
    • தி.மு.க.வில் அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக புதிதாக நியமிக்கப்பட்ட நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், பாளை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஹெலன்டேவிட்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரை அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுதல், இதற்காக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர்கள் விஜிலாசத்யானந்த், எஸ்.வி.சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், தீர்மானக்குழு உறுப்பினர் சுப.சீதாராமான், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், பகுதி செயலளார்கள் கோபி, தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, உலகநாதன், கோட்டையப்பன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், பவுல்ராஜ், ரவீந்தர், நிர்வாகிகள் அய்யாச்சாமி பாண்டியன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    சாம்பவர் வடகரை:

    இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் ஆலோசனையின் பேரில் தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டா குளத்தில் மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் கொட்டாகுளம் கணேசன், மாவட்ட செயலாளர் முருகன், தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கொட்டாகுளம் நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தேவி ஸ்ரீ சிற்றாற்று வீரியம்மன் கோவிலில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் கணேசன் நாடார், சங்கரலிங்க நாடார், சுப்பிரமணிய நாடார், நல்லமுத்து ராசையா நாடார், சுவாமிதாஸ் நாடார், அருணாச்சலம் நாடார், பழனிச்சாமி நாடார், இசக்கி நாடார், துரைராஜ் நாடார், முத்தையா சாமி நாடார், காளிதாஸ் நாடார், முருகையா நாடார் மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ×