search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. இளைஞரணி"

    • ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியார் மீது வழக்கு பதிவு
    • கைது செய்ய கேட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார்

    குழித்துறை :

    தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியார் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்ய கேட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அருமனை போலீஸ் நிலையத்தில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லிஜிஸ் ஜூவன் தலைமையில், மேல்புறம் தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ராஜேஷ் குமார் முன்னிலையில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன், முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் ஜெபா, மாணவரணி துணை அமைப்பாளர் ஜோயல், மேல்புறம் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தோமசிங் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
    • துணை அமைப்பாளர்களாக பிரிட்டோ ஷாம், விஜய், பொன் ஜான்சன், பிரபு, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளராக வக்கீல் அகஸ்தீசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக பிரிட்டோ ஷாம், விஜய், பொன் ஜான்சன், பிரபு, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு மாவட்ட அமைப்பாளராக ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளராக ஜெயச்சந்திர பூபதி, ஆல்வின் பினோ, தோலடி விஜி, பைஜு, ஜான் ஜெபார்சன், லிஜிஷ் ஜீவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி– கூட்டம் நடைபெற்றது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நகர ஒன்றிய பேரூர் அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று வேலூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் கண்ணையன், மாவட்ட இளைஞரணி துணை  அமைப்பாளர்கள் நிர்மல்ராகவன், முரளி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி கலந்துகொண்டு பேசினார். 

    கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள்: 
    நமக்கெல்லாம் பாடமாக திகழ்கின்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் ஒத்துழைப்போடு சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் எண்ணங்களை செயல் வடிவம் தந்து திட்டமாக்கி சட்டமாக்கி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு சமதர்ம காவலர் எல்லோருக்கும் எல்லாம் என்ற நடுநிலையோடு திறமையான ஆட்சியை தமிழகத்திற்கு வழங்குகிற திராவிட மாடல் நல்லாட்சி வழங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டம் பாராட்டி அரசின் 100 பேசும் ஓராண்டு சாதனையால் விளக்குகின்ற வகையில் கிராமங்கள் தோறும் மக்களை சந்தித்து இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர் அணி மற்றும் மாணவரணி இளைஞர்கள் இல்லாத கிராமமே இல்லை என்கிற அளவிற்கு அனைத்து கிராமத்திற்கும் உறுப்பினர்கள் சேர்த்து திமுக ஆட்சிக்கு வலு சேர்க்க வேண்டும். 

    திராவிட இயக்கம் நூற்றாண்டு கடந்த இயக்கம் பல சோதனைகளை கடந்து வீர்கொண்டு எழுந்து இயக்கம். இந்த இயக்கத்தின் வரலாற்றை அறியும் வண்ணம் பாசறை கூட்டங்கள் நடத்திட நகர ஒன்றிய பேரூர் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ×