கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் நியமனம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்புதுணை அமைப்பாளர்களாக பிரிட்டோ ஷாம், விஜய், பொன் ஜான்சன், பிரபு, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் நியமனம்
Published on

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளராக வக்கீல் அகஸ்தீசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக பிரிட்டோ ஷாம், விஜய், பொன் ஜான்சன், பிரபு, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மாவட்ட அமைப்பாளராக ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளராக ஜெயச்சந்திர பூபதி, ஆல்வின் பினோ, தோலடி விஜி, பைஜு, ஜான் ஜெபார்சன், லிஜிஷ் ஜீவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com