search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdul wahab MLA"

    • சட்டமன்ற அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.
    • விண்ணப்பித்த பொதுமக்களுக்கான சான்றிதழ்களை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நெல்லை:

    பொதுமக்கள் பிறப்புச் சான்று, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை எளிமையாக பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசின் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாளை பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முயற்சியில் ஆயுதப்படை மைதானம் எதிரே அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இ- சேவை மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் விண்ணப்பித்த பொதுமக்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த சேவை மையம் மூலம் பிறப்பு சான்று, இறப்பு சான்று, வாரிசு சான்று, விதவை சான்று உள்பட 31 வகையான சான்றிதழ்களுக்கு இங்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜூ, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, கதிஜா இக்கலாம் பாஷிலா, கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், கந்தன், பேச்சியம்மாள், தச்சை பகுதி பொருளாளர் அய்யாசாமி பாண்டியன் மற்றும் வல்லநாடு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
    • தி.மு.க.வில் அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் வண்ணார்பேட்டையில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக புதிதாக நியமிக்கப்பட்ட நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார், பாளை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஹெலன்டேவிட்சன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதி வரை அதிகபடியான புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுதல், இதற்காக பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர்கள் விஜிலாசத்யானந்த், எஸ்.வி.சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், தீர்மானக்குழு உறுப்பினர் சுப.சீதாராமான், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், பகுதி செயலளார்கள் கோபி, தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, உலகநாதன், கோட்டையப்பன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், பவுல்ராஜ், ரவீந்தர், நிர்வாகிகள் அய்யாச்சாமி பாண்டியன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டங்களை சேர்ந்த 305 வீரர்,வீராங்கனைகள் போட்டியில்14 கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான வலுதூக்கும் போட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் நேற்றும், இன்றும் நடைபெற்றது.

    இதில் தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களை சேர்ந்த 305 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் என 4 பிரிவுகளில் 8 உட்பிரிவுகளுடன் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தென் தமிழ்நாடு வலுதூக்கும் சங்க செயலாளர் சுரேஷ், மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் எஸ்.வி.சுரேஷ், கவுன்சிலர் ரவீந்தர், வக்கீல் ராஜா முகமது மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பினை பதிவு செய்து, கல்லூரி அரங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.
    • முகாமில் எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் 200 பேர் தன்னார்வு பணியில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியும், 'வி ஆர் யுவர் வாய்ஸ்' நிறுவனமும் இணைந்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.

    கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஸ்காட் கல்வி குழும இயக்குநர் ஜான் கென்னடி வரவேற்றார்.

    அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக கல்லூரி பொதுமேலாளர் கிருஷ்ண குமார் அப்துல்வகாப் எம்.எல்.ஏ.வுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    மேலும் ஸ்காட் நிர்மாண் சமூக சேவை நிறுவன மாற்றுத்திறனாளிகளின் படைப்புகளை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாராட்டினார். பின்னர் வாய்ஸ் நிறுவன இயக்குநர் காசிம் பாசித், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர் முகமது சாதிக், ஆகியோர் பேசினர்.

    இதனைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பினை பதிவு செய்து, கல்லூரி அரங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.

    அவர்களது தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முகாமில் எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் 200 பேர் தன்னார்வு பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில், பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை இயக்குநர் ஞானசரவணன், திறன் மேம்பாட்டுத்துறை இயக்கு நர் பாலாஜி, ஸ்காட் நிர்மாண் திட்ட இயக்குநர் சார்லஸ், பிளாரென்ஸ் காது கேளாதோர் பள்ளி முதல்வர் ஜான்சன், நாட்டு நலப்பணி இயக்குநர் சுமன் மற்றும் வாய்ஸ் நிறுவன நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை எப்.எக்ஸ். கல்லூரி வளாக மேலாளர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    ×