search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல்
    X

    தேர்தலில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள்.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல்

    • சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 18 திட்ட உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் ஏற்கனவே 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 8 திட்ட உறுப்பின ருக்கான தேர்தல் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்க ளுக்கான தேர்தல் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    18 திட்ட உறுப்பினர்க ளுக்கான தேர்தலில் ஏற்கனவே 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 8 திட்ட உறுப்பின ருக்கான தேர்தல் நடைபெற்றது.

    சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 697 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் மாநகராட்சி மேயர், மண்டல தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சி லர்கள் வாக்களித்தார்கள்.

    இத்தேர்தலில் சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 24 பேர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தல் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதனால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிக்கு சேலம் மாநகர உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. தி.மு.க, அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திட்டக்குழு உறுப்பினர்களுக்கு போட்டி யிட்டு உள்ளனர். திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள் குவிந்துள்ளனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கு இடையே தேர்தல் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×