search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "consulting meeting"

    • பாராளுமன்ற தேர்தலுக்கு இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும்.
    • பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரங்கள் நடத்த வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி மாநகர தெற்கு மண்டல் சார்பாக முத்தையாபுரம் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை

    மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர்கள் உமரி சத்தியசீலன், ராஜா, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மகளிர் அணி தலைவி செல்வி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கு 7 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் வாரியாக பொதுமக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரங்கள் நடத்த வேண்டும் என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் குலசேகர ரமேஷ்,பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் முத்துச்சாமி, விவசாய அணி மண்டல் தலைவர் முத்துராஜ், ஓ.பி.சி. அணி மண்டல் தலைவர் துர்க்கையப்பன், தெற்கு மண்டல் துணை தலைவர் ஜெயசித்ரா ராமலட்சுமி பொய் சொல்லான், மண்டல் செயலாளர்கள் செல்வம், அருண் பாபு, சிவதானு, முத்துகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம் , விந்தியா முருகன், வெளிநாடு தமிழர் நலன் பிரிவு மாவட்ட செயலாளர் பிரேம் குமார், உள்ளாட்சி அமைப்பு பிரிவு மாவட்ட செயலாளர் முத்து பெரியநாயகம், சமூக வலைதள பிரிவு மண்டல் தலைவர் அஜய், தரவுதளவு மேலாண்மை பிரிவு மண்டல் தலைவர் ராஜ்குமார், அமைப்புசாரா பிரிவு மண்டல் தலைவர் அருள் முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மகளிர் உரிமை மாநாட்டிற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு செல்ல வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலா நேரு, மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் ஜெயமாலதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் உரையாற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் மகளிரணியின் பங்கு குறித்து பேசினார். தொடர்ந்து மகளிர் அணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் பேசுகையில், வருகிற 14-ந்தேதி சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு செல்ல வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் ஒற்றுமையுடன் வலுவாக இருந்து 40 தொகுதிகளையும் வென்றெடுக்க பாடுபட வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர்கள் அன்னபூரணி, தமயந்தி, பார்வதி மோகன், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவரும் மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளருமான அனுராதா ரவி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.ம.மு.க. வை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மகளிர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜ.எஸ்.இன்பதுரை முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே..சீனிவாசன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், முன்னாள் எம்.பி.யும், மாவட்ட பொருளாளருமான சவுந்தர்ராஜன், ராதாபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளருமான மைக்கேல் ராயப்பன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட விவசாய அணி இணைச்செயலாளர் லாசர், ராதாபுரம் மேற்கு ஓன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஓன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளரும் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவருமான அம்மா செல்வகுமார், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அருண் புனிதன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சி ராணி, திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார், வள்ளியூர் பேரூர் செயலாளர் பொன்னரசு, முடவை ஜமீன் பாரதி ராஜா, செட்டிகுளம் ராமச்சந்திரன், நிர்வாகிகள் எட்வர்ட் சிங், சந்திரமோகன், பணகுடி பேரூர் துணை செயலாளர் ஜோபி ஜெகன், பணகுடி ேபரூர் இளைஞரணி ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பூத் கமிட்டி உறுப்பி னர்கள் அர்ப்பணிப்புடன் முழு பங்காற்ற வேண்டும் என்று உற்சாகப்படுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, அ.ம.மு.க. வை சேர்ந்த பிரேமா தலைமை யில் 20-க்கும் மேற்பட்ட மகளிர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை புறநகர் பகுதிக்கு உட்பட்ட நகர, கிளை செயலாளர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், பூத் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
    திருவாரூர்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கஜா புயல் மறு கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு திட்ட இயக்குனர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். கஜா புயல் மறு கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு திட்ட கூடுதல் இயக்குனர் பிரதீப் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் கஜா புயல் புனரமைப்பு திட்ட இயக்குனர் ஜெகநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக கான்கிரீட் வீடுகளை கட்டித்தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை கட்டித்தர ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி, நடவு செய்திட துறை அதிகாரிகள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் கஜா புயலால் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கு ஏதுவாக வேளாண் பொறியியல் துறை மூலம் மரங்களை அறுக்கும் எந்திரம் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன.

    இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

    அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

    பின்னர் கடந்த ஜூலை மாதம் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    இதற்காக உள்ளூரில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றியும் ரஜினி மக்கள் மன்றத்தினர் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்பு செயலாளராக இளவரசன் நியமிக்கப்பட்ட பிறகு மன்றத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது. இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டனர்.

    அவர்கள் புகார்களை நேரடியாக தலைமைக்கு அனுப்ப இயலாது. மாவட்ட செயலாளர்களுக்குதான் அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக மாநில அமைப்பு செயலாளர் இளவரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அக்டோபர் 5-ந்தேதி மற்றும் 11-ந்தேதிகளில் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

    ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு 9 மாதங்கள் ஆன நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன.

    எனவே அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாக ரஜினி மக்கள் மன்ற வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.



    ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக பொதுமக்களிடம் சர்வே நடத்தப்பட்டதில் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பது தெரிய வந்துள்ளது.

    எனவே ரஜினி தனது அரசியல் பயண திட்டத்தை அடுத்த மாதமே தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram

    ×