search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Wing"

    • தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மகளிர் உரிமை மாநாட்டிற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு செல்ல வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பாளை மகாராஜா நகரில் உள்ள கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலா நேரு, மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் ஜெயமாலதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் உரையாற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் மகளிரணியின் பங்கு குறித்து பேசினார். தொடர்ந்து மகளிர் அணியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் பேசுகையில், வருகிற 14-ந்தேதி சென்னையில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு செல்ல வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் ஒற்றுமையுடன் வலுவாக இருந்து 40 தொகுதிகளையும் வென்றெடுக்க பாடுபட வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் பேரூராட்சி தலைவர்கள் அன்னபூரணி, தமயந்தி, பார்வதி மோகன், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவரும் மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளருமான அனுராதா ரவி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் அறிக்கை.
    • செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் பாஜக. மகளிரணி நிர்வாகிகள் 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் .செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் நகரை சேர்ந்த ரேவதி என்பவர் வகித்து வந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அதே போல் பல்லடம் நகர மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்த லதாமலர் ஆகியோர் அவர்கள் வகித்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

    ×