சூர்யவம்சம் பட காட்சியை "ரீ க்ரியேட்" செய்த 3BHK படக்குழு

'3 BHK' ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.'3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டது.
சூர்யவம்சம் பட காட்சியை "ரீ க்ரியேட்" செய்த 3BHK படக்குழு
Published on

சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

'3 BHK' திரைப்படத்தின் டிரெய்லரரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற 3BHK படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் சூர்யவம்சம் படத்தின் காட்சியை படக்குழு ரீ க்ரியேட் செய்துள்ளது.

அந்த காட்சியில், "சரத்குமார், தேவயாணி உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக் கொள்வது போன்றும், அதில் சித்தார்த் பங்கேற்காமல் தனித்து நிற்பது போன்றும்" சூர்யவம்சம் படத்தின் காட்சியை ரீ க்ரியேட் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com