ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக்கை சந்தித்த சித்தார்த்-அதிதி ஜோடி

இருவரும் ஆப்பிள் நிறுவனத் தலைவரான டிம் குக் உடன் கலந்துரையாடினர்.டிம் குக்குடன் எடுத்த புகைப்படத்தை சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக்கை சந்தித்த சித்தார்த்-அதிதி ஜோடி
Published on

வாஷிங்டன்:

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருதரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தியில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கிடையே, உலகின் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது நியூ மாடல் ஐ போன் சீரிஸ், வாட்ச் சீரிஸ், ஏர் பாட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கான அறிமுக வெளியீட்டு விழா 'இட்ஸ் க்ளோடைம்' என்ற தலைப்பில் அமெரிக்காவின் ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடந்தது. இந்நிகழ்வில் நடிகர்கள் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் பங்கேற்று ஆப்பிள் நிறுவனத் தலைவரும், தற்போதைய தலைமை செயல் அதிகாரியுமான டிம் குக் உடன் கலந்துரையாடினர்.

இந்நிலையில், டிம் குக்குடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மறக்கமுடியாத மேஜிகல் அனுபவத்தை கொடுத்த டிம் குக்கிற்கு நன்றி. வியப்பூட்டும் வகையில் எங்களைச் சுற்றி புதிய தொழில்நுட்பங்களும், சிறந்த படைப்பாற்றல்களும் இருந்தன. அதனால் எங்களுக்கு கடந்த இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக அமைந்தது. ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது" என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com