மகுடம்: விஷால் 35 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.
மகுடம்: விஷால் 35 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!
Published on

விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.

படத்தை ஆர் பி சவுதிர்யின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு மகுடம் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com