என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் இணையும் விஷால்- அஞ்சலி கூட்டணி
    X

    மீண்டும் இணையும் விஷால்- அஞ்சலி கூட்டணி

    • ராம் இயக்கிய ‘பறந்து போ’ படத்தில் கவுரவ வேடத்தில் தலைகாட்டியிருந்தார்.
    • சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் கடைசியாக 'மதகஜராஜா' படம் வெளியாகி ஹிட் அடித்தது.

    இதையடுத்து ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். இது விஷால் நடிக்கும் 35-வது படம் ஆகும். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

    இந்தநிலையில் விஷால் படத்தில் அஞ்சலி இணைந்திருக்கிறார். ஏற்கனவே 'மதகஜராஜா' படத்தில் விஷாலுடன் அவர் இணைந்து நடித்திருந்தார்.

    சென்னையை காலி செய்து ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அஞ்சலி, சமீபத்தில் ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தில் கவுரவ வேடத்தில் தலைகாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×