இந்த மாதத்தில் தான் ஷங்கர் படம் ரிலீஸாகும்.. தில் ராஜு உறுதி

முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர்.இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
இந்த மாதத்தில் தான் ஷங்கர் படம் ரிலீஸாகும்.. தில் ராஜு உறுதி
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான 'ஜாபிலம்மா' என்ற பாடல் ரிலீஸாகுவதற்கு முன்பே சமூக வலைதளத்தில் லீக்கானதால் பாடல் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தில் ராஜு பகிர்ந்துள்ளார். அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தில் ராஜு 'கேம் சேஞ்சர்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com