என் மலர்
சினிமா செய்திகள்

அடிகளுக்கு கவலைப்பட்டால் பிழைக்க முடியாது- சந்தானம்
- படத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு வேறு எதுவும் நினைக்காதீர்கள்.
- செல்லும் பாதையில் உறுதியாக இருந்தாலே போதும், சினிமாவில் சாதிக்கலாம்.
படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த கூல் சுரேஷ், தற்போது 'உள்ளே செல்லாதீர்கள்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். ரெட் புளூ ஸ்டூடியோஸ் சார்பில் ஜி.முத்துமனோகரன் தயாரித்து, சி.இளையராஜா இயக்கியுள்ளார்.
படத்தின் 'பர்ஸ்ட் லுக்'கை கூல் சுரேசின் நண்பரும், முன்னணி நடிகருமான சந்தானம் சென்னையில் வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார். விழாவில் அவர் பேசும்போது, ''படத்தின் தலைப்பைப் பார்த்து விட்டு வேறு எதுவும் நினைக்காதீர்கள். பேய்க்கதை என்பதால் நிச்சயம் நம்பி பார்க்கலாம்.
நானும், கூல் சுரேசும் டி.ராஜேந்தரின் 'காதல் அழிவதில்லை' படத்தில் துணை நடிகர்களாக நுழைந்தோம். நிறைய பேர் சினிமாவில் வந்து போராடிவிட்டு முடியவில்லை என்று மனரீதியாக சோர்வு அடைந்து சென்றிருப்பதை பார்த்துள்ளோம். ஆனால் கூல் சுரேஷ் கேலி, கிண்டலுக்கு கவலைப்படாமல் இந்த நிலைக்கு வந்துள்ளார்.
வாழ்க்கையில் விழும் அடிகளுக்கு கவலைப்பட்டாலோ, சோர்ந்து போனாலோ நாம் பிழைக்க முடியாது. அடிகளை தாங்கி, தாண்டி எழுந்து ஓடும்போது தான் உண்மையான வெற்றி கிடைக்கும். செல்லும் பாதையில் உறுதியாக இருந்தாலே போதும், சினிமாவில் சாதிக்கலாம். சினிமா பயணம் சாதாரணம் அல்ல'', என்றார்.






