என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `அதிகாரத்துல இருக்கவன் அடிக்க தாண்டா  செய்வான் - தோழர்  சேகுவேரா படத்தின் டிரைலர்
    X

    `அதிகாரத்துல இருக்கவன் அடிக்க தாண்டா செய்வான்' - தோழர் சேகுவேரா படத்தின் டிரைலர்

    • சத்யராஜ் அடுத்து நடித்திருக்கும் திரைப்படம் தோழர் சேகுவேரா.
    • திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவின் வெர்சடைல் நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதுக்கேற்றார் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் நபர். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது வெப்பன் திரைப்படம்.

    வெப்பன் திரைப்படத்தின் ஒரு சூப்பர் ஹுயுமன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் ஒரு மாறுப்பட்ட கெட்டப்பில் நடித்து இருந்தார்.

    சத்யராஜ் அடுத்து நடித்திருக்கும் திரைப்படம் தோழர் சேகுவேரா. இப்படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியானது. திரைப்படம் முன்னதாக மார்ட் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக இருந்தது ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அது தள்ளிப்போனது. திரைப்படம் தற்பொழுது வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அதிகார வர்கத்திற்கும் தொழிலாளி வர்கதுக்கும் இடையே நடக்கு போர் மற்றும் பாகுபாடுகளை பேசக் கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது. சத்யராஜுடன் இணைந்து ரஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், அலெக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    சாம் அலன் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தின் இசையை பி.எஸ் அஷ்வின் இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×