என் மலர்
சினிமா செய்திகள்
கங்குவாக்காக முதலில் குரல் கொடுத்தது நான்தான்... கூல் சுரேஷ்
- அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் கூட, தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட என்னை போல் குரல் கொடுக்கவில்லை.
- ஜெய்பீம் படத்தையும் நான் பார்க்கவில்லை.
சென்னையில் நடைபெற்ற 'காக்கா' படத்தின் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பேசியதாவது:-
போன வாரம் கங்குவான்னு ஒரு படம் ரிலீஸ் ஆனது. நான் என்ன தப்பு பண்ணேன் சொல்லுங்க. என்னை எல்லாரும் போட்டு திட்டுறீங்களே. திருக்குறளில் இல்லாத வார்த்தையெல்லாம் இருக்கு. என்னை மட்டும் திட்டுன்னா பரவாயில்லை. மேல் வீட்டுக்காரன், கீழ் வீட்டுக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், எதிர் வீட்டுக்காரன், இந்த தெரு, அந்த தெரு எல்லா தெருவில் உள்ளவர்களை சேர்த்து ஒரே திட்டுக்கிட்டு இருக்காங்க...
அந்த படத்தின் மீது படம் பார்த்த உங்கள விட எனக்கு தான் கோபம் அதிகம் வரணும். ஏன் தெரியுமா. அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, சிறுத்தை படம் பண்ணும் போதில் இருந்து எனக்கு அவர தெரியும். என்னை அந்த படத்தில் பயன்படுத்தி இருக்கலாம் இல்ல... எத்தனை தடவை போன் பண்ணி பேசியிருப்பேன். என்னை பயன்படுத்தி இருக்கலாம் இல்ல. ஒரு வேளை கேரக்டர் இல்லாமல் இருந்துக்கலாம். ஓகே.
அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார், அவர் வந்து செல்லம்.. தங்கம்-ன்னு என்மேல ரொம்ப பாசமாக இருப்பாரு. அவரும் என்னை பயன்படுத்தல. நீங்க பயன்படுத்தாமல் என்னை இருந்தாலும் அந்த படத்திற்கு அவ்வளவு விமர்சனம் வந்த போதும் நான் தான் முதன் முதலாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு தான் ஜோதிகா மேம் குரல் கொடுத்தாங்க. சில தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்தாங்க. ஆனா விதை நான் போட்டது. அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் கூட, தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட என்னை போல் குரல் கொடுக்கவில்லை. உண்மையில் நான் கங்குவா படத்தை பார்க்கவே இல்லை. காரணம் என்னவென்றால் அந்த படத்தை பார்த்தால், அந்த படத்தில் இடம் பெற்று இருக்கும் கதாபாத்திரங்களை பார்க்கும் பொழுது அதிலெல்லாம் நான் நடித்திருக்கலாமே என்று தோன்றும் அதனால் தான் அந்த படத்தை நான் பார்க்கவில்லை. அதேபோல ஜெய்பீம் படத்தையும் நான் பார்க்கவில்லை. ஆகையால் என்னை திட்டாதீர்கள் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.