என் மலர்
நீங்கள் தேடியது "title teaser"
- படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார்.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நட்சத்திரா பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில், படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
- சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தயாரித்தார்.
- மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை தயாரித்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும்மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.மிஸ்டர் எக்ஸ், வேட்டுவம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.
இந்த படங்களை தொடர்ந்து ரன் பேபி ரன் என்ற படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஆர்யாவிற்கு 36-வது திரைப்படமாகும்.
இப்படத்திற்கு மோகன்லாலின் எம்புரான் படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய முரளி கோபி கதை எழுதியுள்ளார். மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிக்க, அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.
- இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.
- விவேஜஎஸ் 52 படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது புதிய படப்பிடிப்பில் இறங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர் மற்றும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டது. இப்படம் குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த படம் எனது பாணியில் குடும்பப் படமாக அமையும். இளைஞர்களுக்கு பிடிக்கும் படமாகவும் இது இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்தார்.
மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜேஎஸ் 52 படத்தின் டைட்டில் டீசர் வரும் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
- விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
நடிகர் விக்ரம் 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாருடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் சீயான் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அதைத்தொடர்ந்து படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் மலையாள நடிகரான சித்திக் நடிக்கவிருக்கிறார் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவர் 350 மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
டைட்டில் டீசரில் மளிகை கடையில் வேலை செய்யும் விக்ரம் திடீர் என்று துப்பாக்கி எடுத்து சுடும் காட்சிகள் மிரட்டலாக உள்ளது. மற்ற படங்களில் இல்லாத ஒரு விஷயம் இப்படத்தில் உள்ளது. படத்தலைப்பில் வீர தீர சூரன் பாகம் - 2 என்று வெளியிட்டுள்ளனர். முதலில் பாகம் இரண்டை வெளியிட்டபின் பாகம் ஒன்றை வெளியிடப்போகிறார்கள்.
இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் நம் கவனத்தை கவர்கிறது இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வீடியோவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
- காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் STR49 ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது டான் பிக்சர்ஸ் நிறுவனம்.
இந்நிறுவனம் 4வது படமாக நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படத்தை இயக்குகிறது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும்.
இந்நிலையில், அதர்வா நடிக்கும் இந்த படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்த படத்திற்கு இதயம் முரளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வீடியோவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உலகத்தில் பெஸ்ட் லவ்வர் ரோமியோவோ, மஜ்னுவோ, அம்பிகாபதியோ... ஏன் டைட்டானிக் ஜாக் கூட இல்ல... நம்ம இதயம் முரளி தான்டா என்ற வசனம் உள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் நட்டி நட்ராஜ், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, ரக்ஷன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.