அதிதி ஷங்கரா..? இவானாவா..? செல்வராகவன் படத்தில் இணைய போவது யார்..?

இயக்குனர் செல்வராகவன் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார்.
அதிதி ஷங்கரா..? இவானாவா..? செல்வராகவன் படத்தில் இணைய போவது யார்..?
Published on

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் அதன்பின் பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி'. இப்படத்தின் மூலம் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் தீவிரம் காட்டி வருவதாகவும் இதிலும் நடிகர் ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '7ஜி ரெயின்போ காலனி-2' திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிந்துள்ளதால் இதன் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதாகவும் இதில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் மற்றும் இவானாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com