ஒழுக்கத்தை விட்டோம்.. கவனம் ஈர்க்கும் பகாசூரன் பட டிரைலர்..

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பகாசூரன்'.இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பகாசூரன்
பகாசூரன்
Published on

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

பகாசூரன்

இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பகாசூரன்

இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்பது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது

X

Maalai Malar
www.maalaimalar.com