என் மலர்
நீங்கள் தேடியது "shanthanu bhagyaraj"
- பரத் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் திரைப்படம் ’மெஜந்தா’
- படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்படும்.
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்கும் இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் 'மெஜந்தா' படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியது!
நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைத் தயாரிப்பதன் மூலம் தங்களை திரைத்துறையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்ட பல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியுள்ளது.
நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தயாரிப்பதை நோக்கமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு 'மெஜந்தா' திரைப்படம். துடிப்பான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக இருக்கும் இதை 'இக்லூ' புகழ் பரத் மோகன் இயக்குகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்படும்.
தயாரிப்பாளர்கள் டாக்டர் ஜே.பி. லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் கே. ராஜு கூறுகையில், "காதல், நகைச்சுவை மற்றும் விஷூவலாக நிச்சயம் 'மெஜந்தா' சிறப்பான படமாக இருக்கும்.இயக்குநர் பரத் மோகன் கதை சொன்னபோது அதை விஷூவலாக பார்க்க முடிந்தது. அழகான சினிமாட்டிக் ஃபீல்- குட் எண்டர்டெயினர் கதையாக இந்தப் படம் பார்வையாளர்களுக்கு இருக்கும்" என்றார்.
- மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார்.
- ஷேன் நிகாமின் 25- வது திரைப்படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார்.
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, ஐஷ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்நிலையில் ஷேன் நிகாமின் 25- வது திரைப்படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் டைட்டில் கிள்ம்ப்ஸ் வீடியோ நாளை இரவு 9 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
- இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் `இராவண கோட்டம்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் கயல் ஆனந்தி இந்திராவாகவும், திபா ஷங்கர் காளியம்மாவாகவும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
இதற்குமுன்பு சித்ரவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் இளவரசுவும், மதிவாணன் என்ற கதாப்பாத்திரத்தில் சஞ்சய் சரவணனும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் `இராவண கோட்டம்'.
- இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் `இராவண கோட்டம்'. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் பிரபு, இளவரசு, தீபா ஷங்கர், சஞ்சய் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இராவண கோட்டம்
இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.






