என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சலி நாயர்"

    • பரத் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் திரைப்படம் ’மெஜந்தா’
    • படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்படும்.

    பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்கும் இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் 'மெஜந்தா' படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியது!

    நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைத் தயாரிப்பதன் மூலம் தங்களை திரைத்துறையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திக் கொண்ட பல தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியுள்ளது.

    நல்ல எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தயாரிப்பதை நோக்கமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு 'மெஜந்தா' திரைப்படம். துடிப்பான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக இருக்கும் இதை 'இக்லூ' புகழ் பரத் மோகன் இயக்குகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    படத்தின் பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்படும்.

    தயாரிப்பாளர்கள் டாக்டர் ஜே.பி. லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் கே. ராஜு கூறுகையில், "காதல், நகைச்சுவை மற்றும் விஷூவலாக நிச்சயம் 'மெஜந்தா' சிறப்பான படமாக இருக்கும்.இயக்குநர் பரத் மோகன் கதை சொன்னபோது அதை விஷூவலாக பார்க்க முடிந்தது. அழகான சினிமாட்டிக் ஃபீல்- குட் எண்டர்டெயினர் கதையாக இந்தப் படம் பார்வையாளர்களுக்கு இருக்கும்" என்றார். 

    • தமிழில் நெல்லு, உன்னையே காதலிப்பேன், விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் நடித்தவர் அஞ்சலி நாயர்.
    • இவருக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் நெல்லு, உன்னையே காதலிப்பேன், ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.


    கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்கிற இயக்குனரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன்பின்னர் அஞ்சலி நாயர் கடந்த ஆண்டு அஜித் என்கிற உதவி இயக்குனரை திருமணம் செய்துகொண்டார். நடிகை அஞ்சலி நாயரும், இயக்குனர் அஜித்தும் திருமணம் ஆனதில் இருந்தே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள். திருமணமான ஐந்தே மாதத்தில் இந்த தம்பதிக்கு குழந்தையும் பிறந்தது. 




    இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 


    அதில் அவர் கூறி இருப்பதாவது :- "கேரளாவை சேர்ந்தவளாக இருந்தாலும் எனக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும். பூர்வீகம் தமிழ்நாடா என கேட்கும் அளவும் சரளமாக தமிழ் பேசுவேன். இதனால் தமிழ் மொழியில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என நான் விரும்பினேன். 




    நான் தமிழில் முதன்முதலில் நடித்தபோது, வில்லன் நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் அப்படத்தில் வில்லன் மட்டுமல்ல இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். படப்பிடிப்பு இல்லாத சமயத்திலும் என்னை வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார். என்னிடம் புரபோஸ் செய்ததோடு, நான் எங்கு போனாலும் பின் தொடர்ந்து வந்தார். ஒருமுறை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்தார்.


     இதுதவிர எனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு சென்ற அவர், தனது வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தார். இப்படி அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் காவல்துறையின் உதவியை நாடினேன். இதையடுத்து கேரளாவுக்கே சென்றுவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.


    • WIFE’ படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    • 'WIFE’ என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

    அறிமுக இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'WIFE' படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    படத்தின் தலைப்பு மற்றும் கதையின் முக்கியத்துவம் பற்றி இயக்குநர் ஹேமநாதன் ஆர் கூறுகையில், "கணவன் - மனைவிக்கு இடையிலான நவீன உறவை மையமாகக் கொண்டது இந்தப் படம்.

    அதனாலேயே இந்தத் தலைப்பை நாங்கள் தேர்வு செய்தோம். சதுரங்க விளையாட்டில் ஒரு ராணிக்கு எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

    திருமணத்திற்குப் பிறகு மலரும் அன்பை எமோஷனலாக கதையில் எடுத்து வருவதே என் நோக்கம். 'WIFE' என்ற தலைப்பை இதற்கு முன் எந்தத் திரைப்படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை என்ற விஷயம் தெரிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது.

    அப்படி பயன்படுத்ததாது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லா வயதினரும் இந்தப் படத்துடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.

    பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மிர்ச்சி விஜய் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் நடித்து வெளியான அடியே படத்தில் மிர்ச்சி விஜய் சிறப்பாக நடித்து இருந்தார்.

    விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'டாணாக்காரன்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அஞ்சலி நாயர் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத்.
    • ஒரு ஹைப்பர் லிங்க் படமாக உருவாகியுள்ளது

    ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் . இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப் படங்களில் நடித்தார்.

    இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. "ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்பொழுது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர் ,மற்றும் ஷான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எதிர்பாராத விதமாக கிடைக்கும் துப்பாக்கியை வைத்து நான்கு கதாப்பாத்திரத்திற்குள் ஒரு ஹைப்பர் லிங்க் கதைக்களத்தோடு  உருவாகியுள்ளது இத்திரைப்படம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×