என் மலர்
நீங்கள் தேடியது "vikram sukumaran"
- இந்த இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் வெவ்வேறு பாணிகளை பிரதிபலித்தவர்கள்
- குடும்பம், காதல் , நகைச்சுவை என பல்வேறு தளங்களில் பங்களிப்பு செய்தனர்.
2025 ஆண்டு தமிழ் திரையுலகத்துக்கு பெரும் இழப்புகளைத் தந்தது. பல திறமையான கலைஞர்கள் நம்மை விட்டுப் பிரிந்தனர், அவர்களில் இயக்குநர்களின் பட்டியல் குறிப்பிடத்தக்கது.
வி. சேகர், நாராயணமூர்த்தி, வேலு பிரபாகரன், விக்ரம் சுகுமாரன், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் அந்த சோகப் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
இவர்கள் தமிழ் சினிமாவின் வெவ்வேறு பாணிகளை பிரதிபலித்தவர்கள் - குடும்பம், காதல் நகைச்சுவை, சமூக விமர்சனம், யதார்த்த கதைகள் என பல்வேறு தளங்களில் பங்களிப்பு செய்தனர்.
இக்கட்டுரையில் அவர்களின் திரைப்பயணம், சாதனைகள் குறித்து பார்ப்போம்.

1. வி.சேகர்:
நடுத்தர குடும்பங்களின் கதை சொல்லியான வி. சேகர் 1952ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் சினிமாவின் 90கள் மற்றும் 2000களின் குடும்ப நாடகங்களின் மாஸ்டராக திகழ்ந்தார்.
அவர் நடுத்தர குடும்பங்களின் போராட்டங்கள், உணர்ச்சிகள் மற்றும் சமூக அக்கறையை தனது படங்களில் சித்தரித்தார். அவரது திரைப்பயணம் 1980களின் பிற்பகுதியில் தொடங்கியது, ஆனால் 1990களில் பிரபலமானார்.
இவர் இயக்கிய காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா உள்ளிட்ட பல படங்கள் இன்றும் மக்களிடையே ரசிக்கப்படுகின்றன.
அவரது படங்கள் சமூக உணர்வுள்ள குடும்ப பொழுதுபோக்குகளாக இருந்தன, நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை யதார்த்தமாகக் காட்டின. அவர் இயக்கிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக 90களின் குடும்ப திரைப்படங்களின் போக்கை மாற்றின.
துரதிர்ஷ்டவசமாக, 2025 நவம்பர் 14ஆம் தேதி, 73 வயதில் சென்னையின் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இழப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

2. நாராயணமூர்த்தி
இயக்குநர் நாராயணமூர்த்தி 1966ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் காமெடி படங்களுக்கு பெயர் பெற்றவர்.
அவரது திரைப்பயணம் 2001இல் 'மனதை திருடி விட்டாய்' என்ற படத்துடன் தொடங்கியது, இது பிரபு தேவா, வடிவேலு நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து தொடர்ந்து சன் டி.வி.யில் வெளிவந்த நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற சின்னத்திரை தொடர்களையும் அவர் இயக்கி உள்ளார்.
2025 செப்டம்பர் 23ஆம் தேதி, 59 வயதில் இதய நோய் காரணமாக சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையில் காலமானார்.

3. வேலு பிரபாகரன்
புரட்சிகர சினிமாவின் இயக்குநரான வேலு பிரபாகரன் 1957ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், சினிமாட்டோகிராஃபராக பல்துறை திறமை கொண்டவர்.
அவரது திரைப்பயணம் 1980களில் தொடங்கியது, சமூக விமர்சனம் மற்றும் புரட்சிகர கருத்துகளை படங்களில் கொண்டு வந்தார்.
'நாளைய மனிதன்' (1985), 'புரட்சிக்காரன்', 'அசுரன்', 'ராஜலி' ஆகிய அவரது படங்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்தன.
அவர் நடிகராகவும் பல படங்களில் தோன்றினார்.2025 ஜூலை 18ஆம் தேதி, 68 வயதில் நீண்ட நோய் காரணமாக சென்னையில் காலமானார். இதனால் தமிழ் சினிமாவின் புரட்சிகர குரல் அமைதியானது.

4. விக்ரம் சுகுமாரன்
யதார்த்த கதைகளின் இளம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் 1978ஆம் ஆண்டு பிறந்தார். பாலு மகேந்திராவின் உதவியாளராக திரை வாழ்க்கையை தொடங்கியவர்.
அவரது திரைப்பயணம் 2013இல் 'மதயானை கூட்டம்' என்ற படத்துடன் தொடங்கியது, இது டிராமா திரில்லர் வகை. மற்றொரு படம் 'ராவண கோட்டம்' (2023), யதார்த்த கதைகள் மற்றும் சமூக இழைகளை கொண்டது.
அவரது படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவை, இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு உத்வேகம் அளித்தது.
2025 ஜூன் 2ஆம் தேதி, 47 வயதில் மதுரையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணிக்கும்போது திடீர் இதய நிறுத்தம் காரணமாக காலமானார். இளம் வயதில் அவரது இழப்பு தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

5. எஸ்.எஸ்.ஸ்டான்லி
இளைஞர் கதைகளின் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.எஸ். ஸ்டான்லி 1967 டிசம்பர் 14ஆம் தேதி மூணாறில் பிறந்தார்,. இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் பன்முக வித்தகராக திகழ்ந்தார்.
அவரது திரைப்பயணம் 2000களில் தொடங்கியது, இளைஞர்களின் கதைகளை மையமாகக் கொண்ட படங்கள் இயக்கினார். 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான 'ஏப்ரல் மாதத்தில்' படத்தை இயக்கியர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் அடுத்து தனுஷை வைத்து 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தையும், 'மெர்குரி', 'கிழக்கு கடற்கரை சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இதனிடையே, 'பெரியார்' படத்தில் அறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், பொம்மை நாயகி, மகாராஜா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
2025 ஏப்ரல் 15ஆம் தேதி, 57 வயதில் சிறுநீரக பிரச்சினை காரணமாக சென்னையில் காலமானார். தனுஷ் அவருக்கு மருத்துவ உதவி செய்தார். கொலிவுட் அஞ்சலி செலுத்தியது.

முடிவுரை:
2025 ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சோகமானது, இந்த இயக்குநர்களின் இழப்பு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியது.
வி. சேகரின் குடும்ப நாடகங்கள், நாராயணமூர்த்தியின் காதல் நகைச்சுவை, வேலு பிரபாகரனின் புரட்சி, விக்ரம் சுகுமாரனின் யதார்த்தம், ஸ்டான்லியின் இளைஞர் கதைகள் என அவர்களின் பங்களிப்பு வேறுபட்டவை. ஆனால் காலத்தால் அழியாதவை. அவர்களின் படைப்புகள் புதிய தலைமுறைக்கு உத்வேகமாக இருக்கும்....
- மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் இன்று காலமானார்.
- விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் இன்று காலமானார்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது. இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் வெற்றி மாறன், நடிகர்களான சாந்தனு, கலையரசன், காளி வெங்கட்
இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அப்பொழுது அவர் " பாலு மகேந்திரா சார் ஆபிஸ்-இல் நான் வேலைப்பார்த்து இருக்கும் போதே எனக்கு அவர் பழக்கம். அவருடைய மரணம் எனக்கு மிகுந்த வலியை கொடுக்கிறது. நிறைய நல்ல சினிமாவை எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார்" என கூறினார்.
நடிகை விஜி சந்திரசேகர் " இயக்குநர் விக்ரம் சுகுமாரனுடைய இறப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. எனக்கு மிகப்பெரிய பெயர் மற்றும் புகழ் வாங்கி கொடுத்த திரைப்படம் மதயானை கூட்டம். அடுத்தாண்டு ஒரு நல்ல திரைப்படத்தை இயக்க இருக்கிறேன் என இரண்டு வாரங்களுக்கு முன் போன் செய்தார். என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அவர்கள்து குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
- அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது.
- இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதயானை கூட்டம், ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை கொண்டு வரப்படவுள்ளது. இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இறப்பிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
- இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் `இராவண கோட்டம்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் கயல் ஆனந்தி இந்திராவாகவும், திபா ஷங்கர் காளியம்மாவாகவும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
இதற்குமுன்பு சித்ரவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் இளவரசுவும், மதிவாணன் என்ற கதாப்பாத்திரத்தில் சஞ்சய் சரவணனும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் `இராவண கோட்டம்'.
- இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் `இராவண கோட்டம்'. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் பிரபு, இளவரசு, தீபா ஷங்கர், சஞ்சய் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கடந்த மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இராவண கோட்டம்
இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.






