என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரெண்டிங்"
- பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது.
- பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார்.
ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் இசாஹியா கிராஸா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் தனது வாகனத்தில் ஒரு பெண்ணை வாழ்த்தும் காட்சிகள் உள்ளது.
அப்போது அந்த பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார். அந்த பையில் வீட்டு சாவி இருக்கிறது. அப்போது, நான் உங்களுக்கு ஒரு குடியிருப்பை தருகிறேன் என கூறுகிறார். இதைகேட்டதும் அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.
தொடர்ந்து வீடியோவில், அந்த பெண்ணை கிராஸா புதிய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த வீட்டில் படுக்கை வசதி, டி.வி. உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இருக்கிறது.
வீடியோவுடன் கிராஸாவின் பதிவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு இல்லாமல் தெருக்களில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வீட்டை கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறேன். அந்த பெண் ஒரு அற்புதமானவர். இந்த அழகான தருணத்தை என்னால் மறக்க முடியாது.
சமூக வலைதளங்களில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றதன் விளைவாக இந்த சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு 1.10 கோடிக்கும் மேல் பார்வைகளையும், 9 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் கிராஸாவை வாழ்த்தியும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.
- தற்போது தவுபா தவுபா பாடல் டிரெண்டிங்கில் உள்ளது.
- நடிகர் விக்கி கவுசல் அசத்தலாக நடனம் ஆடியிருப்பார்.
சமூக ஊடகங்களில் தற்போது தவுபா தவுபா பாடல் டிரெண்டிங்கில் உள்ளது. பேட் நியூஸ் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு நடிகர் விக்கி கவுசல் அசத்தலாக நடனம் ஆடியிருப்பார்.
இந்த பாடலுக்கு இளசுகள் நடனமாடி வலைத்தளத்தில் பதிவேற்றி லைக்குகளை அள்ளிக் குவித்துவரும் நிலையில், கர்நாடகத்தின் ஆதரவற்ற முதியோர் இல்ல மூதாட்டிகளும் நடனமாடி யாவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர்.
மூதாட்டிகள் 6 பேர் குழுவாக ஒரே நிறத்தில் சேலை கட்டி, தவுபா பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறார்கள். துள்ளல் நடனம் நிறைந்த அந்த பாடலுக்கு, மூதாட்டிகள் எளிமையாக நடனமாடி இருப்பது, நடிகரான விக்கி கவுசலையும் கவர்ந்துள்ளது.
அவரும் அந்த நடன வீடியோவின் கீழ் கருத்து பதிவிட்டு பாராட்டி உள்ளார். தனது வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்தார்.
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. 3.5 லட்சம் பேர் விருப்பப் பொத்தானை அழுத்தி ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
- வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க்.
- டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிராவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம்.
வார்னர் ப்ரோஸ்-க்கு சொந்தமானது அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனலான கார்ட்டூன் நெட்வொர்க். அனைவரும் சிறுவயதில் டாம் அண்ட் ஜெரி, ஸ்கூபி டூ, பவர் கர்ல்ஸ் , ஜானி பிரேவோ கார்ட்டூன்களை பார்த்து மகிழ்ந்திருப்போம். இதை அனைத்தும் தயாரித்து அனைவரும் மகிழ்ச்சிக்கு வழிவகையாக இருந்தது கார்ட்டூன் நென்வொர்க் சேனல் ஆகும்.
ஆனால் நாளடைவில் இதற்கு போட்டியாக பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தன. ஆனாலும் கார்ட்டூன் நெட்வொர்க்கின் உச்சம் குறையவில்லை. 2021 ஆம் ஆண்டு கோவிட் வந்த போது பல நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் நடந்தது. ஆனால் கோவிட் காலத்தில் எந்த ஒரு நட்டமும் இல்லாமல் இயங்கியது இந்த அனிமேஷன் துறை மட்டுமே ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளிகளுக்கு பலியாகும் விதமாக பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் அடுத்த சில ஆண்டுகளில் பல பிரபல அனிமேஷன் ஸ்டூடியோக்களில் இருந்து பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் பல டிசைனர்ஸ் ஒன்றிணைந்து ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் உங்களுக்கு பிடித்தமான கார்ட்டுன் நெட்வொர்க் சேனலின் பிடித்த ஷோவின் கிலிப்பை #ripcartoonnetwork என்று பதிவிடமாறு கூறியிருந்தனர்.
இதன் விளைவாக இந்த ஹேஷ்டாக் டிவிட்டரில் வைரலாகி , இன்று முழுவதும் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் மூடப்பட்டது என தவறான கண்ணோட்டத்தில் புரிந்துக்கொண்டனர்.
- இவருக்காக இதை செய்ய வேண்டும்' என்ற விஷயத்தில் எனக்கு விருப்பம் இல்லை.
- சமூக வலைதளங்களில் வலம்வரும் #DoItForDravid பதிவுகள் குறித்து ராகுல் டிராவிட் கருத்து.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஓய்வு பெறும் ராகுல் டிராவிட்டிற்காக டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என #DoltForDravid என்கிற ஹேஷ்டேக் வலைதளங்களில் ட்ரெண்ட் ஆவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறியிருப்பதாவது:-
'DO IT FOR DRAVID'- இதெல்லாம் எனக்கு புடிக்காது
"எவெரஸ்ட் சிகரத்தை ஏன் ஏற வேண்டும்?" என்ற கேள்விக்கு, "எவெரஸ்ட் சிகரம் என்ற ஒரு விஷயம் உள்ளது.
அதில் ஏறப் போகிறேன்.. அவ்வளவுதான்" என ஒருவர் சொன்னதாக கூறுவார்கள். அப்படித்தான் உலக கோப்பை என ஒன்று உள்ளது, அதை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். அவ்வளவுதான். வேறு யாருக்காகவும் கிடையாது.
'இவருக்காக இதை செய்ய வேண்டும்' என்ற விஷயத்தில் எனக்கு விருப்பம் இல்லை. வேறு ஒருவருக்காக ஒரு செயலை செய்வது என்னுடைய நம்பிக்கை, தன்மைக்கு எதிரானது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இவர் பிரபல தமிழ் பின்னணி பாடகரான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார்.
- டந்த ஜனவரி மாதம் ’கட்சி சேர’ என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகிய குறுகிய நாட்களிலே இணைய தளத்தில் வைரலாகியது.
இளம் இசையமைப்பாளர் பட்டியலில் மிக முக்கியமானவராக திகழ்கிறார் சாய் அபியங்கர், இவர் பிரபல தமிழ் பின்னணி பாடகரான திப்பு மற்றும் ஹரிணியின் மகன் ஆவார். 21 வயது ஆகும் இவர் கடந்த ஜனவரி மாதம் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகிய குறுகிய நாட்களிலே இணைய தளத்தில் வைரலாகியது. இன்ஸ்டாகிராம் மக்கள் ரீல்ஸ்-சை இப்பாடலுக்கு நடனம் ஆடி பதிவு செய்த வண்ணம் கொண்டு இருந்தனர்.
கட்சி சேர வீடியோ பாடலில் சாய் அபியங்கர் பாடுவது போல, இவர் கூட நடிகை சம்யுக்தா மேனன் நடனம் ஆடியிருப்பார். இப்பாடலில் சம்யுக்தா ஆடும் ஒரு குறிப்பிட்ட ஸ்டெப் மிகப் பெரிய வைரல் எலெமண்ட் ஆனது. அதனை அனைவரும் ரீகிரியேட் செய்து போஸ்டுகளை பதிவிட்டனர். யூடியூபில் இப்பாடலை இதுவரை 12 கோடியே 90 லட்ச பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரல் பாடலை தொடர்ந்து தற்பொழுது சாய் அபியங்கர் அவரது அடுத்த பாடலான 'ஆச கூட' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலை அவரே இசையமைத்து , பாடியும் உள்ளார். இவருடன் அவரது தங்கையான சாய் ஸ்மிருத்தியும் இணைந்து பாடியுள்ளார்.
இந்த பாடலின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பாடலில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்த ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்பாடலும் கூடிய விரைவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அப்யங்கர் தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக காலடி எடுத்து வைக்கும் தூரம் வெகு தூரமில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
துருக்கியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரை இளமையாக காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.
அதில், சிகிச்சைக்கு முன்பு அவரது தோற்றம் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவரது தோற்றம் குறித்த படங்கள் உள்ளன.
புகைப்படங்களுடன் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த நிபுணர்கள் வெளியிட்ட பதிவில், மைக்கேலுக்கு பேஸ் லிப்ட், நெக் லிப்ட், கீழ் கண் இமை உள்ளிட்ட இடங்களில் முடி மாற்று செயல்முறைகளை நாங்கள் செய்தோம். அவர் நம்பமுடியாத மாற்றத்தை பெற்றார். அதை நீங்கள் புகைப்படங்களில் காணலாம். நாங்கள் எப்போதும் முழுமையானதாக எடுத்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றத்தை நம்ப முடியவில்லை என ஒரு பயனரும், துருக்கியில் அற்புதங்களை செய்கிறார்கள் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். இதேபோல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட இந்த பதிவு விவாதமாக மாறி உள்ளது.
- தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நயன்தாரா.
- நயன்தாரா கடந்த ஆண்டு சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா கடந்த ஆண்டு சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகி வெற்றி பெற்றதுடன் ரூ.1200 கோடி வசூலிலும் சாதனை படைத்தது.
தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் சொந்த ஊரான கொச்சி மற்றும் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஹாங்காங் நாட்டுக்கு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்.
ஹாங்காங் கடற்கரையில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஜாலியாக வலம் வந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் நயன்தாரா.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
- சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மழை பெய்து ஆட்டம் நின்றுவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. எப்படியாவது சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என கோடிகணக்கான ரசிகர்களில் பிரார்தனை வீணாகியது.
ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணி கைக் கொடுக்க வரவில்லை அவர்கள் போட்டியை வென்ற சந்தோஷத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தனர் அதனால் டோனி கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுக் குறித்து பலரும் பல கருத்துகளையும் விவாதங்களையும் முன் வைத்து வருகின்றனர்.
இது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான வாகன் "தோனியின் கடைசி போட்டியா இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் "லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்" என்று ஆர்சிபி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். டோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள். என கூறியுள்ளார்.
- காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது.
- லைக்ஸ் வாங்குவதற்காக எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் வெளியாகி வருகின்றன.
திருச்சி:
சமூக வலை தளங்களில் 'ரீல்ஸ்' மூலம் காணொளி களை ரிலீஸ் செய்வது இன்று பேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் ரீல்சுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்தச் சூழலில் ரீல்சுக்காகவும் லைக்ஸ் வாங்குவதற்காகவும் எல்லை மீறும் ஒழுங்கீனங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
திருச்சியில் 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். சிக்கென ஜீன்ஸ், கவர்ச்சி பொங்கும் கருப்பு பனியன் அணிந்து அவர்கள் நடனம் ஆடும் ரீல்ஸ் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் பின்னணியில் இளம்பெண்களின் அமர்க்களமான நடனம் தற்போது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
தாளம் தப்பாமல் 3 இளம் பெண்கள் ஆடும் வீடியோவை இளைஞர்கள் ரசித்து வந்தாலும், இதனை கண்ட திருச்சி ரெயில்வே போலீசாருக்கு சுருக் என்றது. காரணம் அவர்கள் நடனமாடி வீடியோ எடுத்தது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில்.
மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் புகைப்படம் வீடியோ எடுக்க வேண்டும் என்றால் அதற்குரிய முன் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி படம் பிடிக்க வேண்டும் என்பது விதிமுறை.
குறிப்பாக பேருந்து, ரெயில் மற்றும் விமான நிலையம் போன்ற பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நடனம் மற்றும் நாடகம் போன்றவை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி பெற்று நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள ரெயில் நிலையத்தில் யார் அனுமதி பெற்று 3 இளம் பெண்கள் கவர்ச்சி ஆடையில் நடனம் ஆடினார்கள்? என்பது பற்றி கேள்வி எழுந்துள்ளது.
எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் நடனம் ஆடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர் இந்த இளம் பெண்கள் யார்? அனுமதி இன்றி வீடியோ எடுக்கும் வரை இதனை பார்த்த ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார்.
- முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது.
திருப்பதி, மே.18-
ஆந்திர மாநிலம் விஜயவாடா அய்யப்ப நகரை சேர்ந்தவர் சாய் (வயது 6) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு பெண் டாக்டர் நன்னப்பனேனி ரவளி என்பவர் வந்தார்.
அவர் பெற்றோர் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பதறியடித்து ஓடுவதை கண்டு திடுக்கிட்டு என்ன நடந்தது என்று கேட்டார். பெற்றோர் நடந்த விஷயத்தை கூறினர்.
உடனடியாக டாக்டர் சிறுவனை பரிசோதித்தார். அப்போது இதயத் துடிப்பு நின்றிருந்தது.
சாலையிலேயே படுக்க வைத்து அதன் பிறகு சி.பி.ஆர். என அழைக்கப்படும் முதலுதவி செய்ய ஆரம்பித்தார். ஒருபுறம் டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார். அங்கிருந்து மற்றொரு நபரிடம் வாயில் காற்று வீசுமாறு கூறினார்.
அவ்வாறு 7 நிமிடங்களுக்கு மேல் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை பைக்கில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் சிகிச்சைக்கு பின் சிறுவன் பூரண குணமடைந்தான்.
சாலையில் வைத்து சிறுவனுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து டாக்டர் ரவளி கூறுகையில்:-
நான் மூத்த டாக்டர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
அப்போது சிறுவனை அவருடைய தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன்.
சிறுவனை பரிசோதித்ததில் அவருக்கு சிபிஆர் முதலுதவி அவசியம் என்பதை உணர்ந்து முயற்சி செய்தேன். நல்ல பலன் கிடைத்தது.
சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் முதலுதவி செய்வதை அனைவரும் கற்றுக் கொண்டால் பல விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார்.
- நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார்.
உல்லு ஓடிடி தளத்தை 2018 ஆம் ஆண்டு விபு அகர்வால் தொடங்கினார். பிரதியேகமான அடல்ட் தொடர்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் ஓடிடி தளமாக இது நிலவி வருகிறது.
நிபு அகர்வால் தற்பொழுது அடுத்ததாக 'ஹரி ஓம்' என்ற ஓடிடி தளத்தை தொடங்கியுள்ளார். இது இதிகாச கதைகளும், புராண கதைகளும் , இந்திய வரலாரும் இதில் ஒளிப்பரப்ப போவதாக கூறியுள்ளார். இந்த ஓடிடி தளத்தில் வெறும் U ரேடட் கண்டண்டுகளை மட்டுமே ஒளிப்பரப்ப போவதாகவும் இது உல்லு தளத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை என கூறியுள்ளார்.
ஹரி ஓம் இந்திய பாரம்பரியம் மற்றும் மத உள்ளடக்கத்தை அனுபவிப்பதற்கான ஒரு இடமாகும், மேலும் இது போன்ற கருப்பொருள்கள் மீது இளைய பார்வையாளர்களிடையே உலகளாவிய ஆர்வத்தை அதிகரிக்கும், இது இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் கதைகளை ஆராயும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹரி ஓம் தளம் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக 20 புராண நிகழ்ச்சியை வைத்து தொடங்க போகிறார்கள். குழந்தைகளுக்கு அனிமேஷன் வடிவில் புராண நிகழ்ச்சிகள் இடம் பெறும் என தெரிவித்துள்ளனர்.
உல்லு போன்ற அடல்ட் வீடியோக்களை தயாரிக்கும் அதே நிறுவனம் இப்படி ஒரு ஆன்மீக தளத்தை தொடங்குவது மகக்ளிடையே அதிர்ச்சியையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் உல்லு நிறுவனத்தை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
- "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார்.
2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை, 'வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் தயாரித்தது.
"கோமாளி"யை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இது பிரதீப் ரங்கனாதனுக்கு ஹிட் படமாக அமைந்தது.
அடுத்தடுத்து கொடுத்த வெற்றி படங்களின் மூலம், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்தது.
அடுத்ததாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வீடியோவை ஏ.ஜி.எஸ் நிறுவனம் கடந்த மாதம் யூ டியூபில் வெளியிட்டது.
பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து அவர்கள் கல்லூரி நாட்களில் நடந்ததை மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிடபட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதைத்தொடர்ந்து படத்தின் தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். படத்திற்கு டிராகன் என பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது எக்ஸ் தளத்தில் " ஃபைரா டைட்டில் கேட்டா ஃபைர் ஓடவே டைட்டில் கொடுக்குறீங்களே" என்று பெருமையுடன் வழங்குகிறேன் என்று பதிவை பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் துவங்கப்படுகிறது. எம்மாதிரியான படமாக் இருக்குமென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்