பாரதிராஜாவின் 'நிறம் மாறும் உலகில்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார்.ஆயுதஎழுத்து திரைப்படத்தில் செல்வநாயகம் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.
பாரதிராஜாவின் 'நிறம் மாறும் உலகில்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் , சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை , முதல் மரியாதை போன்ற மெகா ஹீட் படங்களை இயக்கினார்.

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு  மாற்றிய கலைஞர்களில் பாரதி ராஜா முக்கியமான ஒருவர். படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பிறப் படங்களில் நடித்துக இருக்கிறார். ஆயுதஎழுத்து திரைப்படத்தில் செல்வநாயகம் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை, ராக்கி, வாத்தி, திருசிற்றம்பலம் போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த கள்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனரான பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் "நிறம் மாறும் உலகில்" நடித்துள்ளார்.

பாரதிராஜாவுடன் நட்டி, ரியோராஜ் மற்றும் சாண்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக் ஷன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமாஇன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் 4 நபர்களின் வாழ்க்கையையும் அதை ஒருப் புள்ளியில் இணையும் கதைகக்களமாக அமைந்து இருக்கிறது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படம் இது என குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. படம் வெளியாகும் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com