மா.பொ.சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.
மா.பொ.சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Published on

சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார்.

தற்பொழுது மா.பொ.சி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மாங்கொல்லை கிராமத்தில் மேல்தட்டு சாதி பிள்ளைகள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலமை நிலவி வருகிறது. கீழ்தட்டு மக்களில் படிக்க எதிர்ப்பு கிளம்புகிறது.. இதை எதிர்த்து பொன்னரசன் மற்றும் சிவஞானம் எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர் இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

இப்படத்தை சிராஜ் எஸ் தயாரித்துள்ளார். சித்து குமார் இசையமைக்கிறார். இயக்குனர் வெற்றி மாறன் நிறுவனமான கிராஸ்ரூட் பிலிம் கம்பனி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றூம் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com