என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Granny Is Coming..! தணிக்கை முடிந்தது... திரையரங்குகளை நோக்கி ஒரு ஹாரர் பயணம்
    X

    "Granny" Is Coming..! தணிக்கை முடிந்தது... திரையரங்குகளை நோக்கி ஒரு ஹாரர் பயணம்

    பிரம்மா.காம் படத்தை இயக்கிய விஜயகுமாரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய ஹாரர் ஃபேண்டஸி திரைப்படம் க்ராணி.

    ஒரு மூத்த பாட்டி மற்றும் இரண்டு குழந்தைகளைச் சுற்றி நடக்கும் மர்மமான மற்றும் திகிலூட்டும் சம்பவங்களே இப்படத்தின் கதை. இதில் ஃபேண்டஸி கூறுகளும் கலந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடிகை வடிவுக்கரசி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி, திலீபன் (வத்திக்குச்சி புகழ்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    பிரம்மா.காம் படத்தை இயக்கிய விஜயகுமாரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இதற்கு 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதாவது, இது பெரியவர்களுக்கும், 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஏற்ற படம்.

    தணிக்கை பணிகள் முடிவடைந்த நிலையில், இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    மேலும்,'அழிவில்லாத ஆபத்து' என்ற வாசகத்துடன் க்ராணியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×