என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தக் லைஃப் படத்திற்கு U/A சான்றிதழ்
    X

    'தக் லைஃப்' படத்திற்கு U/A சான்றிதழ்

    • டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life).

    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், 'தக் லைஃப்' படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடம் 42 வினாடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×