பான் இந்தியா படம் இயக்கும் நடிகர் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது.இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார்.
பான் இந்தியா படம் இயக்கும் நடிகர் அர்ஜுன்
Published on

நடிகர் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15-வது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது.

கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். மேலும், சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.

கே. ஜி. எப் படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் துவங்கியது. இதில், சத்யராஜ் ,நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com