என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kd the devil"

    • ‘குஷி' படத்தில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டதையும் மறக்க முடியாது.
    • ‘மிஸ்டர் ரோமியோ' படப்பிடிப்பின்போது பிரபுதேவாவும், வடிவேலுவும் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தனர்.

    பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

    சென்னையில் நடந்த பட விழாவில் ஷில்பா ஷெட்டி பங்கேற்று பேசும்போது, ''சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம். பலமுறை படப்பிடிப்புகளுக்காக சென்னை வந்திருக்கிறேன். எனக்கு பிடித்த தமிழ் உணவு மசாலா தோசை.

    தமிழில் 'மிஸ்டர் ரோமியோ' படப்பிடிப்பின்போது பிரபுதேவாவும், வடிவேலுவும் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தனர். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.

    'குஷி' படத்தில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டதையும் மறக்க முடியாது. அதன்பிறகு, சொல்லிக்கொள்ளும்படியான பெரிய படங்கள் எனக்கு தமிழில் வரவில்லை. அதனால் தான் தமிழில் படங்கள் நடிக்கவில்லை'', என்றார்.

    • பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    கேடி தி டெவில்

    1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் ஏற்படுத்தியுள்ளது.


    கேடி தி டெவில் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிப்பது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா கூறியதாவது, "ராஜ்யங்களுக்கு இடையே நடக்கும் ஒரு மாபெரும் போரை பற்றிய கதை தான் 'கேடி தி டெவில்'. ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு 'சத்யவதி' தேவை.  இந்த 'கேடி' போர்க்களத்தில் நானும் ஒரு அதிசக்தி வாய்ந்த கதாப்பாத்திரத்தில் சத்தியவதியாக நடிப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி" என்று கூறினார்.

    • இயக்குனர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேடி - தி டெவில்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் 'கேடி - தி டெவில்'. காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    கேடி -தி டெவில்

    1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ரவிச்சந்திரன், சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில், ஹீரோ துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் இருவருக்கும் இடையிலான சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் வெடித்ததில் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கேடி -தி டெவில் படக்குழு

    மேலும், சிதறிய கண்ணாடி துண்டுகள் அவரின் முகம், முழங்கை ஆகிய இடங்களில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத், விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்து வரும் படம் ‘கேடி - தி டெவில்’.
    • இந்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் 'ஷோமேன்' பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதன்படி, இந்த படத்திற்கு 'கேடி - தி டெவில்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.


    அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசருக்கு கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஹீரோக்கள் குரல் கொடுத்துள்ளனர். இதன் தமிழ் பதிப்புக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். இந்தி மற்றும் மலையாளப் பதிப்புக்கு சஞ்சய் தத், மோகன்லால் மற்றும் கன்னட பதிப்பிற்கு இயக்குனர் பிரேம் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.


    இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பிரேம் பேசியதாவது, "எங்கே நல்லது இருக்கிறதோ, அங்கே கெட்டதும் இருக்கும். உதாரணத்திற்கு, ராமன் இருந்தபோது, ராவணனும் இருந்தான். படத்தில் இதே போன்ற வரிகள் உள்ளன. இந்தப்படம் ரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல, காதல் மற்றும் அறம் கலந்த கதை. இந்த படம் கேஜிஎஃப் மற்றும் புஷ்பாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம்" என்று கூறினார்.

    இப்படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழங்கவுள்ளது குறிப்பிடத்தகக்து.



    ×