என் மலர்
நீங்கள் தேடியது "Shilpa Shetty"
- 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது புகார்.
- வெளிநாட்டு செல்ல அனுமதி பேட்டு மும்பை நீதிமன்றத்தில் மனுதாக்கல்.
பாலிவுட் நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவருமான ஷில்பா ஷெட்டி தனது கணவனர் ராஜ் குந்த்ரா உடன் இணைந்து 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தீபக் கோதாரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக பணத்தை பெற்றுக்கொண்டு தனிப்பட்ட செலுவுக்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இதனால் ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அவர் வருகிற 25ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி யூடியூப் நிகழ்ச்சியாக கொழும்பு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் மும்பை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணையின்போது, லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனுமதி வழங்க முடியாது. முதலில் மோசடி வழக்கு தொடர்பாக 60 கோடி ரூபாயை செலுத்துங்கள். பின்னர், வெளிநாட்டிற்கு செல்ல பேக் செய்வது குறித்து பரிசீலனை செய்யுங்கள் என நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது.
அத்துடன் வழக்கை வருகிற 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
- நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
- இந்த வழக்கை மும்பை போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை:
பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார்.
ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.
இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர் 2015-ம் ஆண்டில் இருந்து 2023 காலகட்டங்களில் ரூ.60.48 கோடி பணம் கொடுத்துள்ளார். அதிக வட்டியை தவிர்க்க, இதை முதலீடு என மாற்றி பதிவு செய்ததாக கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார்.
பணம் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன், அந்தத் தொகையை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
அதன்பிறகு, அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 கோடி திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை என கோத்தாரி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஜூஹு காவல் நிலையத்தில் கோத்தாரி புகார் அளித்தார்.
இந்நிலையில், புகாரின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ‘குஷி' படத்தில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டதையும் மறக்க முடியாது.
- ‘மிஸ்டர் ரோமியோ' படப்பிடிப்பின்போது பிரபுதேவாவும், வடிவேலுவும் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தனர்.
பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' திரைப்படம் விரைவில் வெளியாகிறது.
சென்னையில் நடந்த பட விழாவில் ஷில்பா ஷெட்டி பங்கேற்று பேசும்போது, ''சென்னை எனக்கு மிகவும் பிடித்த இடம். பலமுறை படப்பிடிப்புகளுக்காக சென்னை வந்திருக்கிறேன். எனக்கு பிடித்த தமிழ் உணவு மசாலா தோசை.
தமிழில் 'மிஸ்டர் ரோமியோ' படப்பிடிப்பின்போது பிரபுதேவாவும், வடிவேலுவும் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தனர். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.
'குஷி' படத்தில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டதையும் மறக்க முடியாது. அதன்பிறகு, சொல்லிக்கொள்ளும்படியான பெரிய படங்கள் எனக்கு தமிழில் வரவில்லை. அதனால் தான் தமிழில் படங்கள் நடிக்கவில்லை'', என்றார்.
- எய்ட்ஸ் விழிப்புணர்வு மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டியை ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரி முத்தமிட்டார்.
- இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, கடந்த 2007-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஏய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரியும் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நடிகர் ரிச்சர்டு கன்னத்திலும், கையிலும் முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த ரிச்சர்டு ஹிரி
நிகழ்ச்சி மேடையில் நடிகை ஷில்பா நடிகர் ரிச்சர்டின் இந்த செயல் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் இருந்ததாக கூறி இந்திய கலாசாரத்தை அவமதித்து விட்டதாகவும் கூறி வலதுசாரி அமைப்புகள் ஷில்பா ஷெட்டிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். மேலும், ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்டு மீது ராஜஸ்தானில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 2017-ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது.

ஷில்பா ஷெட்டி
பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக ரிச்சர்டு மற்றும் ஷில்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் வழக்கில் இருந்து ரிச்சர்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், ஷில்பா ஷெட்டி மீது வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழக்கில் இருந்து ஷில்பாவை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டது. ஷில்பா ரிச்சர்டு ஹிரியின் செயலால் பாதிக்கப்பட்டவர் அவர் எந்த குற்றசெயலையும் செய்யவில்லை என்று கூறி ஷில்பா ஷெட்டியை வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்து வழக்கையும் முடித்து வைத்தது.
இந்நிலையில், வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை கீழமை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, ஷில்பா ஷெட்டி வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
- பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி.
- இவர் 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவாவுடன் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இந்தத் தொடரை இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார். இந்த வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை, ஜுஹு பகுதியில் அமைந்துள்ளது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் நடிகை ஷில்பா ஷெட்டி இத்தாலி நாட்டுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

இந்நிலையில், அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஷில்பா ஷெட்டியின் தரப்பில் ஜுஹு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்நிலையில் ஷில்பா உணவகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்
- அதிக வருமானம் கிடைக்கிறது ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கு அதிக போன் அழைப்புகள் வருகின்றன
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பல்வேறு வணிகத்திலும் அவர் ஈடுபட்டு உள்ளார்.
மும்பை மாநகரத்தின் மைய பகுதியில் 'பாஸ்டியன் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.இந்த உணவகம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது.
இந்நிலையில்ஷில்பா தனது நடிப்பு தொழிலை விட இந்த உணவகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.அதிக வருமானம் கிடைக்கிறது. இந்த ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கு அதிக போன் அழைப்புகள் வருகின்றன.
கடந்த நிதியாண்டில் தனது ஹோட்டல் தான் ஜிஎஸ்டி தொகையை அரசுக்கு செலுத்தியதில் முதலிடத்தில் இருந்தது. ஹோட்டல் தொழில் தனக்கு மகிழ்ச்சி தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
48 வயதாகும் ஷில்பா தற்போது பஞ்சாபி இல்லத்தரசி கேரக்டரில் ஒரு இந்தி படத்திலும் நடித்து உள்ளார்.
- ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது
- விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பல்வேறு வணிகத்திலும் அவர் ஈடுபட்டு உள்ளார்.
மும்பை மாநகரத்தின் மைய பகுதியில் 'பாஸ்டியன் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.இந்த உணவகம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. 48 வயதாகும் ஷில்பா தற்போது பஞ்சாபி இல்லத்தரசி கேரக்டரில் ஒரு இந்தி படத்திலும் நடித்து உள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது :-

எனது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் தயாரிப்பாளர்களிடம் இருந்து பல நிராகரிப்பு, அவமானங்களை நான் சந்தித்தேன். ஏமாற்றம், மனச்சோர்வு அடைந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.
நான் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் நான் என் தந்தையுடன் வேலை செய்ய விரும்பினேன். புதிதாகவும் சிறப்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என எனக்கு ஆசை இருந்தது.
இந்நிலையில் ஒரு 'பேஷன் ஷோ' நிகழ்ச்சி பார்க்க சென்ற போது எனது நிலைமை மாறியது. ஒரு புகைப்படக்கலைஞர் என்னை படம் எடுத்தார். அதன் மூலம் பேஷன் துறைக்கு அறிமுகமானேன்.அதன் பிறகு எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது.

நான் நடிக்க வந்தபோது எனக்கு வயது 17. அப்போது நான் உலகத்தைப் பார்க்கவில்லை, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை.இந்தியில் பேசத் தெரியாமல், கேமரா முன் நிற்பதை நினைத்து பதட்டமாக இருந்தது. அதன்பின் முயற்சி செய்து நடித்து பிரபலமானேன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் பாகுபாடு காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் நான் விடாப்பிடியாக இருந்தேன். இவ்வளவு தூரம் வந்த பிறகு ஒரு அடி கூட பின்வாங்க மனமில்லை.

நான் வெற்றி பெற்ற பிறகு, என்னை பலர் பாராட்டினர். எனது விடாமுயற்சி, போராடும் குணம் தான் எனக்கு வெற்றியை தேடித் தந்தது. தற்போது நான் ஒரு வலிமையான சுதந்திர பெண்ணாகவும், நடிகையாகவும், மனைவியாகவும், தாயாகவும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார். இவர்களுக்கு வியான் மற்றும் ஷமிஷா என இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு ஆடம்பர பங்களா உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. மேலும் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமாக 'ஜெட்' விமானம் ஒன்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா உள்ளிட்ட சிலர் சத்யக் கோல்டு என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினர்.
- சத்யக் கோல்டு நிறுவனத்தில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தேன்.
மும்பை:
மும்பையை சேர்ந்த நகை வியாபாரி பிரிதிவிராஜ் கோதாரி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்த்ரா உள்ளிட்ட சிலர் சத்யக் கோல்டு என்ற நிறுவனத்தை 2014-ம் ஆண்டு தொடங்கினர். அவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த விலைக்கு தங்கம் பெறலாம் என கூறினர்.
இதை நம்பி நான் அவர்களது நிறுவனத்தில் ரூ.90 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் அவர்கள் சொன்னது போல தங்கமும் தராமல், எனது பணத்தையும் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டனர். மோசடியில் ஈடுபட்ட நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் மீது பி.கே.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதி என்.பி. மேத்தா விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறினார். எனவே அவர் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதான மோசடி புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பி.கே.சி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- ஷில்பா ஷெட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.
- 2017 ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது.
தமிழில் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.
ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.
2013 ஆண்டு சல்மான் கானுடன் இணைந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஷில்பா ஷெட்டி பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் ஷில்பா ஷெட்டி பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக 2017 ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், ஷில்பா ஷெட்டி மீது பதிவான SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஒரு சமூகத்தை இழிவு செய்ய வேண்டும் என திட்டமிட்டு, அந்த வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை என நீதிபதி அருண் மோங்கா கருத்து தெரிவித்தார்.
- ராஜ்குந்த்ரா மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- மொத்தம் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து அதை மொபைல் செயலியில் பதிவிறக்கம் செய்ததாக கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.
ராஜ்குந்த்ரா மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மும்பை உள்ளிட்ட இடங்களில் ராஜ் குந்த்ரா வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. மொத்தம் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- இந்திய திரையுலகின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி.
- இவர் 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' வெப் தொடரில் நடித்து வருகிறார்.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவாவுடன் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இந்தத் தொடரை இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது ஷில்பா ஷெட்டி தனது காலை உடைத்துக் கொண்டுள்ளார். உடைந்த காலுடன் கட்டுப்போட்டு வீல் சேரில் ஷில்பா ஷெட்டி இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ஷில்பா ஷெட்டி
இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைதளத்தில், "உண்மையிலேயே காலை உடைத்துக்கொண்டேன். இன்னும் 6 வாரங்களுக்கு தன்னால் படப்பிடிப்புகளில் பங்கேற்க முடியாது. விரைவாக குணமடையப் பிரார்த்தியுங்கள். இன்னும் வலுவான, சிறப்பான முறையில் திரும்ப வருவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு ஷில்பா ஷெட்டி இந்த வெப் தொடருக்காக சண்டைக் காட்சி ஒன்றில் நடிப்பது போன்ற ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
They said, Roll camera action - "break a leg!" I took it literally😂😜 🤦🏽♀️
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) August 10, 2022
Out of action for 6 weeks, but I'll be back soon stronger and better. Till then, dua mein yaad rakhiyega 🙏🤲🏼
Prayers always work 😇
With gratitude,
Shilpa Shetty Kundra ♥️🧿✨ pic.twitter.com/Y2muSjdCYr
மும்பையை சோ்ந்த தொழில் அதிபர் நிதின் பாரய் பாந்திரா போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவன இயக்குனர் காசிப்கான், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா உள்ளிட்டவர்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 51 லட்சத்தை முதலீடு செய்யுமாறு என்னிடம் கூறினர். இதற்காக எஸ்.எப்.எல். பிட்னஸ் நிறுவனத்தின் சார்பில் புனேயில் உள்ள ஹடாப்சர் மற்றும் கோரேகான் பகுதிகளில் ஜிம், ஸ்பா திறந்து தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து நான் பணத்தை முதலீடு செய்தேன். ஆனால் சொன்னது போல அவர்கள் செய்யவில்லை. மேலும் என்னிடம் பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது, என்னை மிரட்டினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை அடுத்து போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஷில்பா ஷெட்டி இந்த குற்றச்சாட்டை மறுத்து வருத்தம் தெரிவித்து உள்ளார்.






