search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Trader"

  • கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர்.
  • கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  காஞ்சிபுரம்:

  காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமின் அன்சாரி. நேற்று இரவு 8 மணியளவில் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் என்பவர் மட்டும் கடைக்கு வந்து திடீர் சோதனை நடத்தினார்.

  விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மீது புகார் வந்திருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமின் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் தான் இதே கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி சென்று இருந்தனர். மீண்டும் சோதனையில் ஈடுபட்டதால் மனவேதனை அடைந்த தமின்அன்சாரி தனது குடும்பத்தினை கடைக்கு வரவழைத்து பெட்ரோல் பாட்டிலுடன் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  பின்னர் சோதனை குறித்த ஆய்வு அறிக்கையை கடையின் சுவரில் அதிகாரி ஒட்டிச் சென்றார். இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  • சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

  விழுப்புரம்:

  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் ஜோய்ஆண்டனி (வயது 50), முரளி தாஸ் (48). இருவரும் நண்பர்கள். இவர்கள் திண்டிவனத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஜோய்ஆண்டனி பலத்த ரத்த காயங்களுடன் தனியார் தங்கும் விடுதி வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக சென்ற போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  இது தொடர்பாக அவரது நண்பர் முரளி தாசை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் மது அருந்தியபோது, ஏற்பட்ட தகராறில் ஜோஸ்ஆண்டனி பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது. இருவருமே மது போதையில் இருப்பதால், போலீசாரால் சரியான முறையில் விசாரணை நடத்தமுடியவில்லை. அவர்களின் போதை தெளிந்தபின்னர் விசாரணை நடத்த போலீ சார் திட்டமிட்டுள்ளனர். காயமடைந்த ஜோஸ்ஆண்டனியில் கழுத்தில் காயம் உள்ளதால் அவ ரால் பேசமுடியவில்லை. அவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • உடன்குடி பஜாரில் உள்ள ஒரு காய்கறி கடையில் சுமார் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது 10 வயது பேத்தியுடன் வந்து காய்கறி வாங்கினார்.
  • பின்னர் அவர்கள் அதற்கான விலையாக பழைய 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர்.

  உடன்குடி:

  உடன்குடி பஜாரில் உள்ள ஒரு காய்கறி கடையில் சுமார் 60 வயது மூதாட்டி ஒருவர் தனது 10 வயது பேத்தியுடன் வந்து காய்கறி வாங்கினார். பின்னர் அவர்கள் அதற்கான விலையாக பழைய 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அப்போது அந்த கடையில் இருந்த வாலிபர் இந்த ரூபாயை நான் பார்த்ததே இல்லை. இது செல்லாத ரூபாய் நோட்டுகள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேறு ரூபாய் நோட்டுக்கள் தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

  உடனே அந்த மூதாட்டி, இது நமது இந்திய அரசு வெளியிட்ட பணம் தான் என்று சொல்லியும் கடையில் இருந்த வாலிபர் வாங்க மறுத்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த சிலர் இந்த பணம் செல்லும் என்றும், சிலர் சொல்லாது என்றும் கருத்துக்களை தெரிவித்தனர். எனினும் அந்த மூதாட்டியிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை. பின்னர் ரூ. 50 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • செல்வம் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
  • செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.

  கள்ளக்குறிச்சி: 

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த மலர் (வயது 50). இவருடைய மகள் ராசாத்தி (30) இவரது கணவர் செல்வம் (45) ஆடுகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வத்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. இதனால் மனம் உடைந்த ராசாத்தி சின்ன சேலம் விஜயபுரத்தில் உள்ள தனது தாயார் மலர் வீட்டில் தன் பிள்ளை களுடன் வசித்து வருகிறார்.

  இந்த நிலையில் செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.பின்னர் மனைவி ராசாத்தியிடம் நகைகளை கேட்டார். இதனால் இரு வருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த செல்வம் தனது மனைவி ராசாத்தி மற்றும் அவரது தாய் மலரையும் கட்டையால் தாக்கினார். இதில் மாமியார் மலரின் மண்டை உடைந்தது. இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ராசாத்தி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்த னர்.

  • வியாபாரியை கடத்தி சென்று தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

  மதுரை

  ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நோக்கன் கோட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது32). மதுரை அப்பன் திருப்பதியை சேர்ந்தவர் தங்க பிரகாஷ். இருவரும் கட்டிடங்களுக்கு தேவை யான பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

  இதனால் தொழில் போட்டி காரணமாக இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் முத்துக்குமாரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இதுகுறித்து கே.புதூர் போலீஸ் நிலையத்தில் முத்துகுமாரின் சகோதரர் குமரன் சேதுபதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முத்துக்குமாரை சிலர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில் முத்துக்குமாரின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார் அங்கிருந்து அவரை மீட்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பன்திருப்பதியை சேர்ந்த தங்கபிரகாஷ், தங்கம், சர்வேயர் காலனி சரவணன், கே.புதூர் முன்னமலை, எஸ்.கொடிக் குளம் ராமர் ஆகிய 5 பேர் அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பிரகாஷ், தங்கம், சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

  • அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது
  • ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

  புதுச்சேரி:

  தக்காளி விலை கடந்த 2 மாதமாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதுவை அருகே பொதுமக்கள் ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்கி குழம்பு, ரசம், சட்னிக்கு பயன்படுத்தும் சுவாரசிய சம்பவம் நடந்து வருகிறது.

  ஆசியாவிலேயே பெரிய மார்க்கெட் என்று அழைக்கப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்து வருவதால் கடந்த ஜூன் மாதம் 1 கிலோ தக்காளி ரூ.100-யை தொட்டது. தொடர்ந்து தக்காளியின் விளைச்சல் குறைவு காரணமாக வரத்து குறைந்ததால் ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

  சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு தக்காளி வாங்கி வரப்பட்டு இங்கு மொத்தம் மற்றும் சில்லறைக்கு விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இருந்து புதுவை மட்டுமல்லாது புதுவை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் இங்கிருந்து மூட்டை கணக்கில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரிகள் தக்காளியை வாங்கி கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

  தற்போது தக்காளியின் விலை கிலோ ரூ.180-லிருந்து ரூ.200-ஐ எட்டி உள்ள நிலையில் புதுவை அருகே தமிழக பகுதியான பட்டானூர் பகுதியில் ஒரு சிலர் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வாங்கி அதனை சட்னி, குழம்பு, ரசம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

  இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தினக்கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர்.

  தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 110 கிராம் தக்காளி (டொமோட்டோ சாஸ்) சாஸ் ரூ.15-க்கு கிடைக்கிறது. 100 கிராம் தக்காளி சாஸ் செய்வதற்கு 300 கிராமிலிருந்து இருந்து அரை கிலோ வரை தக்காளி தேவைப்படும்.

  அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. மளிகைக் கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸில் இனிப்பு சுவை இருப்பதால் அவற்றுடன் சமையலுக்கு புளி, மிளகாய் ஆகியவற்றை கூடுதலாக சேர்த்து இயற்கையான சுவையை பெற முடிகிறது என்றார். இதனால் இந்த பகுதி மக்கள் ஏராளமானோர் தற்போது தக்காளி சாஸ்க்கு மாறி உள்ளனர்.

  • நேற்று வழக்கம்போல் பால சுப்பிரமணி சேரன்மகாதேவி அருகே உலகன்குளம் கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
  • அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாலை யோரத்தில் மயங்கி விழுந்தார்.

  நெல்லை:

  களக்காடு அருகே உள்ள மாவடியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி(வயது 47). இவர் பேக்கரி பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச்சென்று கிராமங் களில் விற்பனை செய்து வந்தார்.

  நேற்று வழக்கம்போல் சேரன்மகாதேவி அருகே உலகன்குளம் கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

  அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாலை யோரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  • சுப்பிரமணியன் நேற்று அவரது சொந்த ஊரான கண்ணாடிகுளம் கிராமத்தில் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கயத்தாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
  • அய்யனார் ஊத்து கிராமத்தின் அருகே வரும் போது எதிரே வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் மோதியது.

  கயத்தாறு:

  தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம் கிராமம் வடக்கு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), இளநீர் வியாபாரி. இவர் தற்போது கயத்தாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

  இந்நிலையில் சுப்பிரமணியன் நேற்று அவரது சொந்த ஊரான கண்ணாடி குளம் கிராமத்தில் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கயத்தாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அய்யனார் ஊத்து கிராமத்தின் அருகே வரும் போது எதிரே வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் மோதியது.

  இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் சென்று சுப்பிரமணி யின் உமலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிதனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ஜெய கணேஷ் சிலையின் அருகே சாய்ந்து நின்றபடி கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் மீது திடீரென்று சிலையோரம் சென்ற மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்தது.
  • படுகாயம் அடைந்த ஜெயகணேஷ் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய கணேஷ் (வயது46). கீரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட் அண்ணா சிலை அருகில் நின்று கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

  அப்போது சிலையின் அருகே சாய்ந்து நின்றபடி கீரை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் மீது திடீரென்று சிலையோரம் சென்ற மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த ஜெயகணேஷ் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
  • எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

  மதுரை:

  வெங்காயம் இல்லாத உணவை வீடுகளில் பார்க்க முடியாது. சமையலின் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் தமிழகத்தில் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

  மதுரையில் கீழவெளி வீதியில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயம் பல்வேறு பகுதிகளுக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

  வெங்காயம் குளிர்கால பருவ பயிராகும். தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பதால் வெங்காய பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.

  அவ்வாறு வரும் வெங்காயம் இங்கு நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு லாரிகளில் வந்த சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் அழுகிவிட்டன. இதன் காரணமாக அதனை வைத்துக் கொள்ள முடியாமல் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர்.

  இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இங்கு நிலவும் வெப்பம் காரணமாக வெங்காயம் தாக்குபிடிக்க முடியாமல் அழுகி விடுகிறது. இதனால் எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.