கயத்தாறு அருகே வேன் மோதி வியாபாரி பலி

சுப்பிரமணியன் நேற்று அவரது சொந்த ஊரான கண்ணாடிகுளம் கிராமத்தில் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கயத்தாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.அய்யனார் ஊத்து கிராமத்தின் அருகே வரும் போது எதிரே வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் மோதியது.
பலியான சுப்பிரமணியன்
பலியான சுப்பிரமணியன்
Published on

கயத்தாறு:

தென்காசி மாவட்டம் கண்ணாடிகுளம் கிராமம் வடக்கு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), இளநீர் வியாபாரி. இவர் தற்போது கயத்தாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சுப்பிரமணியன் நேற்று அவரது சொந்த ஊரான கண்ணாடி குளம் கிராமத்தில் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கயத்தாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அய்யனார் ஊத்து கிராமத்தின் அருகே வரும் போது எதிரே வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் சென்று சுப்பிரமணி யின் உமலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிதனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com