என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பத்தின் காரை பெயர்ந்து விழுந்து வியாபாரி மண்டை உடைந்தது
    X

    பழுதடைந்து உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம்.

    மின் கம்பத்தின் காரை பெயர்ந்து விழுந்து வியாபாரி மண்டை உடைந்தது

    • தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
    • வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பெருமாள் சாமி( வயது 48), வியாபாரி. இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது. இது குறித்து மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கடந்த 11 ந் தேதியன்று வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது மின் கம்பத்தின் காரை திடீரென பெயர்ந்து பெருமாள் சாமி தலை மீது விழுந்தது. இதனால் அவரது மண்டை உடைந்தது. அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து பெருமாள் சாமி குடும்பத்தினர் கூறியதாவது:- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு மண்டை உடைந்து 7 தையல்கள் போட்டு, ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவானது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×