முக்கூடலில் ஓலை வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

முக்கூடல்- ஆலங்குளம் செல்லும் ரோட்டில் மிக்கேல் ராயப்பன் பனை ஓலை வியாபாரம் செய்து வந்தார்.மிக்கேல் ராயப்பனை இருவரும் சேர்ந்து அவதூறாக பேசி தாக்கி உள்ளனர்.
முக்கூடலில் ஓலை வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது
Published on

நெல்லை:

முக்கூடல் அருகே உள்ள தாளார்குளத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராயப்பன் (வயது 48). இவர் கடந்த 14-ந் தேதி முக்கூடல்- ஆலங்குளம் செல்லும் ரோட்டில் பனை ஓலை வியாபாரம் செய்து வந்தார்.

அப்போது அங்கு வந்த முக்கூடலை சேர்ந்த முருகப்பெருமாள் என்ற பழனி (35) மற்றும் முத்துக்குமார் (36) ஆகிய இருவரும் சேர்ந்து மிக்கேல் ராயப்பனை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது உறவினர் மேரீஸ் ராஜாவையும் அடித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மிக்கேல் ராஜா முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகப் பெருமாள், முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com