search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிக வெப்பத்தால் அழுகும் நிலை: மூட்டை மூட்டையாக குப்பையில் வீசப்பட்ட வெங்காயம்
    X

    அதிக வெப்பத்தால் அழுகும் நிலை: மூட்டை மூட்டையாக குப்பையில் வீசப்பட்ட வெங்காயம்

    • மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
    • எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    மதுரை:

    வெங்காயம் இல்லாத உணவை வீடுகளில் பார்க்க முடியாது. சமையலின் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் தமிழகத்தில் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    மதுரையில் கீழவெளி வீதியில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயம் பல்வேறு பகுதிகளுக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    வெங்காயம் குளிர்கால பருவ பயிராகும். தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பதால் வெங்காய பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.

    அவ்வாறு வரும் வெங்காயம் இங்கு நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு லாரிகளில் வந்த சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் அழுகிவிட்டன. இதன் காரணமாக அதனை வைத்துக் கொள்ள முடியாமல் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இங்கு நிலவும் வெப்பம் காரணமாக வெங்காயம் தாக்குபிடிக்க முடியாமல் அழுகி விடுகிறது. இதனால் எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×