என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fraud cases"

    • சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர உள்ளதாகவும் தீபக் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
    • பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர்

    பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீதான ரூ.60 கோடி மோசடி வழக்கில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.  கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவரிடமிருந்து ரூ.60 கோடி மோசடி செய்ததாக இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகார்தாரரின் அறிக்கையின்படி, தனது பணத்தை பறிமுதல் செய்ய அமலாக்க இயக்குநரகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின்படி சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர உள்ளதாகவும் தீபக் கோத்தாரி தெரிவித்துள்ளார்.

    பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் எனும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் உள்ளனர். 2015-2023 காலகட்டத்தில் இந்த நிறுவனத்திற்கு தொழிலதிபர் தீபக் கோத்தாரியை ரூ.60.48 கோடி முதலீடு செய்ய தூண்டியதாகவும், ஆனால் அந்தப் பணத்தை இருவரும் தங்களின் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


    செக் (காசோலை) மோசடி வழக்குகள் நீண்ட காலம் இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. #LokSabha #FraudCase #BillPassed
    புதுடெல்லி:

    செக் (காசோலை) மோசடி வழக்குகள் நீண்ட காலம் இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக செலாவணி மசோதா 1881-ல் திருத்தம் செய்து புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

    இதன் மூலம் செக் மோசடி வழக்குகளில் இருக்கும் தேவையற்ற சட்ட நடைமுறைகள் களையப்படுகின்றன. அத்துடன் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இந்த மோசடியில் ஈடுபட்டவரிடம் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு 20 சதவீதத்துக்கு மிகாமல் நிவாரணம் பெற்று தரப்படும். அதேநேரம் குற்றம் சாட்டப்பட்டவர் இறுதியில் விடுவிக்கப்பட்டால், அவர் வழங்கிய நிவாரணம் வட்டியுடன் திரும்ப கிடைக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக இந்த மசோதாவை தாக்கல் செய்த நிதித்துறை இணை மந்திரி சிவ் பிரசாத் சுக்லா, காசோலைகள் மற்றும் வங்கி நடைமுறைகள் மீதான நம்பகத்தன்மையை இந்த மசோதா காக்கும் என்று கூறினார்.  #LokSabha #FraudCase #BillPassed  #tamilnews 
    ×