என் மலர்
இந்தியா

முதலில் ரூ.60 கோடி டெபாசிட்: பின்னர் வெளிநாட்டு பயணம்- மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் கறார்
- 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது புகார்.
- வெளிநாட்டு செல்ல அனுமதி பேட்டு மும்பை நீதிமன்றத்தில் மனுதாக்கல்.
பாலிவுட் நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளர்களில் ஒருவருமான ஷில்பா ஷெட்டி தனது கணவனர் ராஜ் குந்த்ரா உடன் இணைந்து 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தீபக் கோதாரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தொழிலை விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக பணத்தை பெற்றுக்கொண்டு தனிப்பட்ட செலுவுக்காக பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இதனால் ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அவர் வருகிற 25ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி யூடியூப் நிகழ்ச்சியாக கொழும்பு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் மும்பை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணையின்போது, லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனுமதி வழங்க முடியாது. முதலில் மோசடி வழக்கு தொடர்பாக 60 கோடி ரூபாயை செலுத்துங்கள். பின்னர், வெளிநாட்டிற்கு செல்ல பேக் செய்வது குறித்து பரிசீலனை செய்யுங்கள் என நீதிமன்றம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது.
அத்துடன் வழக்கை வருகிற 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.






