ஷில்பா ஷெட்டி கணவர் வீடு - அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

ராஜ்குந்த்ரா மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மொத்தம் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஷில்பா ஷெட்டி கணவர் வீடு - அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
Published on

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து அதை மொபைல் செயலியில் பதிவிறக்கம் செய்ததாக கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.

ராஜ்குந்த்ரா மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மும்பை உள்ளிட்ட இடங்களில் ராஜ் குந்த்ரா வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. மொத்தம் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com